தோல்வியை பகிரங்கமாக ஒப்புக்கொண்ட அதர்வா பட இயக்குனர்.. இதுல இப்படி ஒரு அரசியல் இருக்கா!

பிரபல வாரிசு நடிகரை வைத்து படம் எடுத்த இயக்குனர் ஒருவர் படத்தின் தோல்வியை வெளிப்படையாக அறிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் தோல்விக்காக ரசிகர்களிடையே பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டுள்ளார். பொதுவாகவே படம் தோல்வி அடைந்தாலும் அதை படத்தின் இயக்குனரோ, நடிகர்களோ பெரிதாக பேச மாட்டார்கள், ஆனால் இந்த இயக்குனர் சமூக வலைதளத்தில் தன்னுடைய படம் தோல்வி என பகிர்ந்துள்ளார்.

பட வெளியீட்டின்போது ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி எனவும், படத்தில் இருந்த குறைகளுக்கு ரசிகர்கள் தன்னை மன்னித்து விட வேண்டும் என்றும், இன்னும் கடினமாக உழைத்து அடுத்த திரைப்படத்தை சிறப்பாக தருவேன் என்றும் கூறியிருக்கிறார்.

2017 ஆம் ஆண்டு ரிலீசான திரைப்படம் 8 தோட்டாக்கள். இந்த படத்தில் வெற்றி, எம். எஸ். பாஸ்கர், நாசர், அபர்ணா பாலமுரளி நடித்திருந்தனர். இந்த படத்தை இயக்கியவர் ஶ்ரீ கணேஷ். இந்த படம் வணிக ரீதியாக வெற்றியடையாவிட்டாலும் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

காவலர் ஒருவரின் கைத்துப்பாக்கி தொலைந்து விடுகிறது. அதில் இருக்கும் 8 தோட்டாக்கள் யாரை கொல்கிறது, எதற்காக கொல்கிறது என்பதை மையப்படுத்தி இயக்குனர் இந்த படத்தை விறுவிறுப்பாக எடுத்திருந்தார்.

இந்த இயக்குனரின் இரண்டாவது படம் தான் குருதி ஆட்டம். அதர்வா, பிரியா பவானி ஷங்கர், ராதிகா, ராதா ரவி இந்த படத்தில் நடித்திருந்தனர். குருதி ஆட்டம் இந்த மாதம் 5 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. மேலும் இது கலவையான விமர்சனங்களையே ரசிகர்களிடம் பெற்றது.

இந்த நிலையில் தான் இயக்குனர் ஶ்ரீ கணேஷ் படத்தின் தோல்விக்காக மன்னிப்பு கேட்பதாக டிவிட்டரில் பகிர்ந்து இருக்கிறார். மேலும் குருதி ஆட்டம் வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி OTT-யில் வெளிவரும் எனவும் கூறியுள்ளார். இவரின் இந்த பதிவு OTT யில் படம் வெற்றி பெற வைக்கும் யுத்தியாக அனைவராலும் சொல்லப்படுகிறது.

sri-ganesh
sri-ganesh