சமீப காலமாக பல்வேறு படங்கள் கதாநாயகிகளை முன்நிறுத்தி பெரிய அளவில் வெளியிடப்படுகின்றன. அவற்றில் சில மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்று வருகின்றன.
ஜோதிகா நடிப்பில் வெளியான ராட்சசி நாச்சியார் ஜாக்பாட் பொன்மகள் வந்தால் போன்ற படங்கள் குடும்பங்கள் கொண்டாடும் வகையில் அமைந்ததோடு வசூலையும் பெற்றது.
நயன்தாரா நடிப்பில் வெளியான அறம் டோரா மூக்குத்தி அம்மன் ஐரா கோலமாவு கோகிலா போன்ற படங்களும் வேறலெவல் ஹிட்டை வழங்கின. அதேபோல அனுஷ்கா நடிப்பில் வந்த அருந்ததி பாகமதி சைலண்ஸ் போன்ற படங்களும்.

திரிஷா நடிப்பில் வெளியான மோகனி பரமபதவிளையாட்டு போன்ற படங்களும். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் காக்கா முட்டை க/பெ ரணசிங்கம் கனா படங்களும் தமிழ் திரையில் நீங்கா இடம் பெற்றன.
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பெண்குயின் போன்ற படங்களும் கதநாயகிகளை முன்வைத்து வெற்றியும் கண்டன. இப்படியாக இருக்க திரைக்கு வர தயாராகும் படங்களில் பலவும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக தயார் நிலையில் உள்ளன.
நயன்தாரா நடிப்பில் நெற்றிக்கண்.
திரிஷா நடிப்பில் கர்ஜ்ஜனை ராங்கி.
ஜெயலலிதாவின் வாழ்க்கை படமான தலைவி கங்கனா ரணாவத் நடிப்பிலும்.
சமந்தா நடிப்பில் சாகுந்தலம்
ரெஜினா தாமஸ் நடிப்பில் சூர்ப்பனகை
காஜல் அகர்வால் நடிப்பில் பாரிஸ் பாரிஸ்
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் பூமிகா.
இவைகள் யாவும் நாயகிகளை முக்கியப்படுத்தி திரைக்கு வர தயாராக உள்ளன.
பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் அத்தனை படங்களும் தமிழில் ஹிட்டடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.