கோலிவுட்டிலிருந்து பாலிவுட்டுக்கும் பாலிவுட்டிலிருந்து கோலிவுட்டிலும் ரீமேக் ஆகும் படங்களின் எண்ணிக்கை வருடா வருடம் தங்க விலை போல் உயர்ந்தவாறே உள்ளன. அவ்வாறு தமிழில் இருந்து சில படங்கள் இந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்பட்டுள்ளன.
அந்நியன் படம் விக்ரம் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் தமிழில் மாஸ் ஹிட்டடித்த திரைப்படம். அம்பி ரெமோ அந்நியன் என மூன்று விதங்களில் ஒரே நாயகனை வைத்து அசத்திய ஷங்கர். இப்போது இந்தியில் அவரே ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளார்.

இந்தியன்-2 படத்திற்கு பிறகு அப்படத்தின் படப்பதிவு தொடங்க உள்ளதாம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பி் வெளியான கைதி திரைப்படம் அதன் விருவிரு திரைக்கதையாலும்.

ஒரே நாள் இரவில் அமைந்த கதைக்கருவாலும் பெரிதும் பேசப்பட்டதோடு கலெக்சனும் எடுத்த படம் என்பது தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் அறிந்ததே. இப்படத்திற்கும் இந்தி ரீமேக் செய்யப்பட உள்ளது. அருண்விஜய் இரட்டை வேடத்தில் கலக்கிய படம் “தடம்”
மாறுபட்ட கதையம்சம் தெளிவான திரைக்கதை என இப்படத்திற்கான பாசிட்டிவ் கமாண்டுகள் அதிகம். தமிழில் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் பாராட்டு பெற்ற இப்படமும் இந்தியில் ரீமேக் ஆக உள்ளது.

தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் மாஸ் ஹிட்டடித்த ராட்சசனும் ரீமேக் ஆக உள்ளது.