கமல் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த விக்ரம் படத்திற்குப் பிறகு மிக பிஸியாக இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை நடித்து முடித்து விட்ட பிறகு யாருடைய இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்று பல இயக்குனர்களின் பெயர்கள் லிஸ்ட் போய்க் கொண்டே இருந்தது. அதில் தற்போது சில இயக்குனர்களின் படங்களில் நடிப்பதாக முடிவு எடுத்து இருக்கிறார்.
அதில் முதலாவதாக எச் வினோத் இயக்கத்தில் கமல் நடிப்பதாக உறுதியாகி உள்ளது. அதற்காகத்தான் விலைமதிப்பு மிகுந்த ஒரு காரை அவருக்கு பரிசாகவும் கொடுத்திருக்கிறார். மேலும் அதற்கான வேலைகளில் இயக்குனர் பார்த்து வருகிறார். அடுத்ததாக மணிரத்தினம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதற்காக வாக்கு கொடுத்து இருக்கிறார்.
அதனை அடுத்து லோகேஷ் இயக்கத்தில் விக்ரம் 2 படத்தை நடிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு இருக்கிறார். ஆனால் இதற்கெல்லாம் முன்னதாகவே இவருடைய லிஸ்டில் முதலில் இருந்தது இயக்குனர் பா ரஞ்சித் மற்றும் மகேஷ் நாராயணன். ஆனால் இப்பொழுது இவர்கள் இயக்கத்தில் கமல் நடிக்கப் போவதில்லை என்று தெரிகிறது.
ஆனால் முதலில் பா ரஞ்சித் அவர்கள் தான் கமலிடம் கதையை கூறி அதற்கான சம்மதத்தையும் வாங்கி இருந்திருக்கிறார். அதனால் இவர்கள் கூட்டணியில் வெளிவரும் படம் கண்டிப்பாக சமுதாய கருத்துள்ள படமாக இருக்கும் என்று அதிகமாக தமிழ் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில் இது அவர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுக்கும்.
ஆனால் ரஞ்சித்திடம் கமல் ஓகே சொன்னதால் தான் அதற்கான முழு கதையையும் ரெடி பண்ணி இவருக்காக காத்துக் கொண்டிருந்தார். இப்பொழுது இந்த இயக்குனருக்கு கமல் டாட்டா காட்டிவிட்டார் என்று சொல்லலாம். இதற்கெல்லாம் காரணம் எந்த இயக்குனருடன் இணைந்தால் வசூலை அதிக அளவில் பார்க்கலாம் என்று கமல் இந்த முடிவை எடுத்து இருக்கிறார்.
ஏனென்றால் தற்போது கமலுடைய ரேஞ்சே வேற லெவல்ல மாறிடுச்சு என்று சொல்லலாம். அதற்கு காரணம் அவர் தேர்ந்தெடுத்த இயக்குனர் மற்றும் கதைதான். அதனாலேயே இவரின் அடுத்தடுத்த படங்களிலும் அதிக அளவில் வசூலை குவிக்க வேண்டும் என்பதற்காக தந்திரமாக செயல்பட்டு வருகிறார்.