விஜய் சேதுபதியை நம்பாமல் கார்த்திக் செய்த வேலை..

நடிகர் கார்த்தியின் படம் ஒன்றில் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதாக அறிவிப்புகள் வெளியாகின. ஆனால் தற்போது சேதுபதிக்கு பதிலாக தெலுங்கு நடிகரை படக்குழு ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கார்த்தி-விஜய் சேதுபதி கூட்டணியை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இது ஒரு பெரிய ஏமாற்றமாக உள்ளது.

விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் திரைப்படங்களை தொடர்ந்து நடிகர் கார்த்தியின் 24 வது பட அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்க, ராஜூமுருகன் இயக்குகிறார். இந்த படத்திற்கு ஜப்பான் என பெயரிடப்பட்டது.

ராஜு முருகன் ஏற்கனவே ஜோக்கர், குக்கூ, ஜிப்ஸி படங்களை இயக்கியவர். ஜோக்கர் திரைப்படம் தேசிய விருது வென்றது. குக்கூ திரைப்படத்தில் பார்வையற்ற இருவரின் காதல் கதையை மிக அழகாக கூறியிருப்பார். அதன் பின்னர் ஜீவாவை வைத்து ஜிப்ஸி படத்தை இயக்கினார்.

ஜிப்ஸி படத்திற்கு பிறகு ராஜு முருகன் கார்த்தியுடன் இணைகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம் தொடங்கியது. இந்த படத்தில் முதலில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருந்தார். தற்போது அவருக்கு பதிலாக தெலுங்கு நடிகர் சுதீப் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் சுதீப் ஏற்கனவே தமிழில் நான் ஈ, முடிஞ்சா இவன புடி, புலி போன்ற திரைப்படங்களில் நடித்திருக்க்கிறார். எனினும் சுதீப் தமிழ் மக்களிடையே வரவேற்பை பெற்ற படம் என்றால் அது நான் ஈ திரைப்படம் தான்.

கார்த்தி, விஜய் சேதுபதி இருவருமே ரொம்ப எதார்த்தமாக நடிக்க கூடியவர்கள். இவர்கள் இரண்டு பேரின் காம்போவை திரையில் பார்க்க ரசிகர்கள் ஆசை பட்ட நிலையில், சேதுபதி ஜப்பான் படத்தில் இல்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இது போன்றே விஜய் சேதுபதி புஷ்பா 2 வில் நடிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஏமாற்றமானது.