வாயை பிளக்க வைக்கும் என்டிஆர் இன் சொத்து மதிப்பு.. என்னதான் இருந்தாலும் நம்ப ஹீரோ லெவலுக்கு வர முடியாது.!

தாரக் என்னும் இயற்பெயர் கொண்ட ஜூனியர் என்டிஆர் பலம் பெறும் நடிகர் மற்றும் ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் என்டி ராமாவின் பேரன் ஆவார். இவர் சினிமாவில் ஹீரோவாக மட்டுமல்லாமல் குச்சிப்புடி நடன கலைஞரும் பின்னணி பாடகரும் ஆவார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோவாக இருக்கிறார்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் இவரை தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கே ரொம்பவும் பிடிக்கும். இயக்குனர் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களுக்கும் பிடித்த நடிகராக இவர் இருந்தார். தற்போது இவர் நடித்த இந்த படம் ஆஸ்கார் விருது வாங்கி இருக்கிறது. இந்த படத்தின் அறிமுக காட்சியை பார்த்து ஹாலிவுட் இயக்குனர்களே மிரண்டு போயிருக்கின்றனர்.

ஆஸ்கார் வெற்றிக்குப் பிறகு ஜூனியர் என்டிஆர் தன்னுடைய அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். இதுவரை 35 லிருந்து 40 கோடி வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த இவர் தன்னுடைய சம்பளத்தை 50 கோடியாக உயர்த்த திட்டமிட்டு இருக்கிறார். இப்படி தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் இவரின் சொத்து மதிப்பு தான் தற்போது ஆந்திரா மீடியாக்களால் பேசப்பட்டு வருகிறது.

39 வயதாகும் ஜூனியர் என்டிஆருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுக்கு இருக்கின்றார்கள். இவர் தனக்கென சொந்தமாக ஜெட் விமானம் வைத்துள்ளார். இவரின் சொத்து மதிப்பு 550 கோடி என்று கூறப்படுகிறது. இவருக்கு சொந்தமாக பல பங்களாக்கள் ஹைதராபாத்தில் இருக்கின்றன. இப்படி கோடி கணக்கில் சொத்துக்களோடு ராஜ வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

ஜூனியர் என்டிஆர் தன்னுடைய சம்பளத்தை 50 கோடியாக நிர்ணயம் செய்ததையே பயங்கர வைரலாக தெலுங்கு மீடியாக்கள் பேசி வருகின்றனர். நம் தமிழ் ஹீரோக்களான ரஜினி, விஜய், அஜித் இவர்களோடு ஒப்பிடும்போது இவரின் சம்பளம் இரண்டு, மூன்று மடங்கு கம்மி தான். மேலும் நம் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் வாங்கும் சம்பளத்திற்கு ஈடாக இவர் வாங்குவதற்கு இன்னும் பத்து வருடங்கள் ஆவது ஆகும்.

ஆஸ்கர் விருது பிரம்மாண்டமான தயாரிப்பு வசூல் வேட்டை என இந்த ஹீரோக்கள் எல்லாம் படங்கள் எடுத்தாலும் நம் தமிழ் ஹீரோக்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், நடிகர் அஜித்குமார் இவர்கள் வாங்கும் சம்பளத்தில் பக்கத்தில் கூட வேற எந்த ஹீரோ வர முடியாது என்பது நிதர்சனம்.