Actor Ajith : சமீபகாலமாக தெலுங்கு தயாரிப்பாளர்களின் படங்களில் டாப் ஹீரோக்கள் நடித்து வருகிறார்கள். ரஜினி, விஜய், அஜித் போன்ற நடிகர்களின் படங்கள் வசூல் ரீதியாக எப்போதுமே பெரிய லாபத்தை தான் பெற்று தருகிறது. இதனால் பெரிய தயாரிப்பாளர்கள் அவர்களின் படத்தை தயாரிக்க போட்டி போட்டுக் கொண்டு இருப்பார்கள்.
இந்த சூழலில் தெலுங்கு தயாரிப்பாளர்கள் தமிழ் நடிகர்களின் மூலம் லாபம் பார்க்க அவர்களது படத்தை தயாரிக்க முன் வந்திருக்கின்றனர். அந்த வகையில் தளபதி 69 படத்தை டிவிவி மூவிஸ் தயாரிக்கிறது. ஏற்கனவே விஜய் வாரிசு படத்தில் மூலம் தெலுங்கில் தயாரிப்பாளரான தில் ராஜு படத்தில் நடித்திருந்தார்.
அடுத்ததாக தனுஷின் 51வது படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கிறது. ஏற்கனவே தனுஷும் தெலுங்கில் வாத்தி என்ற படத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து இப்போது சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வரும் நிலையில் அவருடைய 23வது படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது.
அதாவது ஸ்ரீ லட்சுமி மூவிஸ் இப்படத்தை தயாரிக்கிறது. சிவகார்த்திகேயனும் இதற்கு முன்னதாக பிரின்ஸ் படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் நடித்துள்ளதால் இவருக்கு இது ஒன்றும் புதிதல்ல. அடுத்ததாக அஜித்தும் இந்த லிஸ்டில் இருப்பது தான் பலருக்கும் வியப்பாக இருக்கிறது.
இப்போது அஜித் விடாமுயற்சி படத்தில் நடித்த வருகிறார். அடுத்ததாக ஏகே63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ள நிலையில் மைத்ரி மூவி மேக்கர் இப்படத்தை தயாரிக்கிறது. இதன் மூலம் அஜித்தும் தெலுங்கு தயாரிப்பாளர் படத்தில் நடிக்க இருக்கிறார்.