அவர மாதிரி மோசமானவர பார்த்ததில்லை.. கமலை சீண்டும் தாடி பாலாஜியின் முன்னாள் மனைவி

சினிமாவில் ஒரு காமெடியனாக வலம் வந்த தாடி பாலாஜி இப்போது விஜய் டிவியில் செட்டில் ஆகிவிட்டார். அதில் ஒளிபரப்பாகும் காமெடி நிகழ்ச்சிகளில் அவ்வப்போது இவர் தலைக்காட்டி வருகிறார். இந்நிலையில் இவருடைய முன்னாள் மனைவி நித்யா கமலை சீண்டும் விதமாக பேசியிருப்பது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தாடி பாலாஜிக்கு நித்யா என்ற மனைவியும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த சில வருடங்களாகவே பிரிந்து வாழும் இந்த தம்பதிகள் அவ்வப்போது ஏதாவது ஒரு சர்ச்சையை கிளப்பி சோசியல் மீடியாவுக்கு தீனி போட்டு வருவார்கள். அதிலும் நித்யா, தாடி பாலாஜி குறித்து பல அவதூறுகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

அதன் காரணமாகவே அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறும் வாய்ப்பு கிடைத்தது. அங்கும் சண்டை போட்டுக் கொண்டிருந்த இந்த ஜோடியை சேர்த்து வைக்க சேனல் நிர்வாகம் பல முயற்சி எடுத்தது. ஆனாலும் நித்யா தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தார். அது மட்டுமல்லாமல் இவர்களை சேர்த்து வைப்பதற்காக சமரசம் பேசிய கமல் குறித்தும் அவதூறாக பேசினார்.

இது கடும் விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் அவர் கமலை சீண்டியுள்ளார். இது குறித்து ஒரு சேனலில் தொலைபேசி வழியிலாக பேசியிருக்கும் நித்யா, இந்த உலகத்திலேயே கமல் மாதிரி ஒரு மோசமானவர நான் பார்த்ததே இல்லை. என்னை பேச வைக்காதீர்கள், அவர் பற்றிய நிறைய விஷயங்கள் எனக்கு தெரியும் என்று தெரிவித்துள்ளார்.

அவருடைய இந்த பேச்சை கேட்ட ரசிகர்கள் நீங்க ரொம்ப ஒழுங்கா, உங்க பொண்ணையே சரியா வளர்க்க தெரியல என்று கண்டபடி பேசி வருகின்றனர். இதற்கு முன்னதாகவே நித்யா அவர் மகளுடன் இணைந்து சோசியல் மீடியாவில் ரீல்ஸ் போன்ற வீடியோக்களை பதிவிட்டு இருந்தார். இதை பலரும் விமர்சனம் செய்திருந்தனர். ஆனால் அவை எல்லாவற்றிற்கும் நித்யா தன்னுடைய பாணியில் பதிலடி கொடுத்து வந்தார்.

அதன் பிறகு சில நாட்கள் இவர் குறித்து எந்த சர்ச்சையும் ஏற்படவில்லை. இந்நிலையில் சமீபத்தில் இவர் தன் வீட்டிற்கு எதிர் வீட்டில் இருப்பவருடன் சண்டை போட்டு, அவர் கார் கண்ணாடியை உடைத்தது பரபரப்பை கிளப்பியது. அதற்காக கைது செய்யப்பட்ட நித்யா பிறகு ஜாமினில் வெளிவந்தார். இப்படி தொடர்ந்து ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கும் இவர் இப்போது கமல் பற்றி பேசி அடுத்த சர்ச்சைக்கு அஸ்திவாரம் போட்டிருக்கிறார்.