லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. கமல்ஹாசன் தயாரித்து நடித்த அந்த திரைப்படம் இப்போது வரை 480 கோடி வரை வசூலித்து பாக்ஸ் ஆபிஸை திணற வைத்துள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாட்டிலும் இப்படம் வசூல் சாதனை புரிந்தது குறிப்பிடத்தக்கது.
இதனாலேயே லோகேஷ் இயக்க இருக்கும் தளபதி 67 திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட இருக்கிறது.
ஆனால் படம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பே தற்போது வியாபாரத்தை தொடங்கி இருக்கிறது. அந்த வகையில் இப்படத்தின் ஃப்ரீ ரிலீஸ் பிசினஸ் மட்டுமே 400 கோடியை நெருங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் தமிழ் உட்பட அனைத்து மொழி டிஜிட்டல் ரைட்ஸ் மட்டுமே 175 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர சாட்டிலைட் உரிமையை வாங்குவதற்கும் பல சேனல்கள் இப்போதே போட்டி போட ஆரம்பித்துள்ளது. அதனாலேயே தயாரிப்பாளரான லலித் தற்போது மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார். இன்னும் பூஜையே ஆரம்பிக்கவில்லை அதற்குள் தளபதி 67 இப்படி ஒரு எதிர்பார்ப்பை கிளப்பி இருப்பது திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதை வைத்து பார்க்கும் பொழுது லோகேஷ் தன்னுடைய முந்தைய பட சாதனையை அவரே முறியடித்து காட்டும் அளவுக்கு படுஜோராக களத்தில் இறங்கி இருக்கிறார் என்பது தெரிகிறது. விக்ரம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியால் உற்சாகத்தில் இருக்கும் லோகேஷ் கனகராஜ் இந்த தளபதி 67 திரைப்படத்தை விஜய்க்காகவே ரொம்பவும் மெனக்கெட்டு தயார் செய்திருக்கிறார்.
அந்த வகையில் இந்த கூட்டணி மாஸ்டர் திரைப்படத்தை விட பல மடங்கு மாஸாக களமிறங்கி இருக்கிறது. இந்த வருட இறுதியில் பூஜையுடன் ஆரம்பிக்கப்பட இருக்கும் தளபதி 67 திரைப்படம் அடுத்த வருடத்தில் வெளியாக இருக்கிறது. மேலும் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் வாரிசு திரைப்படத்தை விட இன்னும் சூட்டிங் ஆரம்பிக்கப்படாமல் இருக்கும் இந்த திரைப்படத்திற்கு தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.