பொங்கலுக்கு ரிலீசான விஜய்யின் வாரிசு திரைப்படம் திரையரங்குகளில் 250 கோடியை தாண்டி உலகெங்கும் வசூலில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அடுத்த படமான தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு இன்னும் துவங்கப்படாத நிலையில், அதற்கு முன்பே பல கோடிக்கு ப்ரீ சேல் ஆகி இருக்கும் விவரம் தற்போது வெளியாகி திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இந்த படத்தில் மும்பையைச் சேர்ந்த கேங்ஸ்டராக விஜய் நடிக்கிறார். இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா நடிக்க உள்ளார். தளபதி 67 படத்தில் சஞ்சய் தத், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜுன், மிஷ்கின், விஜய் சேதுபதி போன்ற மிகப்பெரிய வில்லன் பட்டாளமே நடித்து வருகிறார்கள். மேலும் இந்த படத்தில் விக்ரம் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று தகவல்கள் வெளியானது.
இவர்களின் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் லோகேஷ் செதுக்கி உள்ளாராம். இதுமட்டுமின்றி இந்த படத்தில் விக்ரம் படத்தில் மிரட்டிய கமலஹாசன் வர உள்ளதாகவும் தகவல் வெளியானது. இப்படி மல்டி சூப்பர் ஸ்டார் இணைந்து நடிக்கும் தளபதி 67 படத்தை பான் இந்தியா படமாகவும் உருவாக உள்ளது.
இதனால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தளபதி 67 ஷூட்டிங் துவங்குவதற்கு முன்பே 500 கோடி ப்ரீ சேல் ஆகி உள்ளது. இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்படுவது மட்டுமல்லாமல் விக்ரம் படத்தை விட பயங்கர கேங்ஸ்டர் படமாக தளபதி 67 படத்தை உருவாக்க லோகேஷ் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.
இதனால் இந்த படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பதம் பார்த்து பக்குவமாய் செதுக்கி கொண்டிருக்கிறாராம். ஒவ்வொரு நாளும் தளபதி 67 படத்தை குறித்து லோகேஷ் புது புது அப்டேட்டை கொடுத்து கொண்டிருக்கும் நிலையில் மரண மாஸ் ஆன அப்டேட் பிப்ரவரி 1,2,3 இல் ரிலீஸ் ஆகும் என்று அறிவிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அது மட்டுமில்லாமல் இந்த படம் ஒரு அதிரடியான படமாகவும் இருக்கும் என்று சொல்லி இருக்கிறார். அதற்கேற்றார் போல் இப்போது தளபதி 67 படம் உருவாவதற்கு முன்பே 500 கோடி லாபம் பார்த்திருப்பதால் லோகேஷ் இந்த படத்தின் பிரம்மாண்டத்தை இன்னும் அதிகப்படுத்துவார் போல் தெரிகிறது.