ஒரே ஒரு படம் சக்ஸஸ், அந்த செல்லத்த தூக்கிட்டு வாங்க என கூறிய தளபதி.. கதை கேட்டு என்ன சொன்னார் தெரியுமா?

தளபதி விஜய் கோலிவுட்டில் சூப்பர் ஸ்டாருக்கு அடுத்து மாஸான இடத்தில் இருக்கிறார். விஜய்யை நம்பி 100 கோடிக்கு மேல் கூட பணம் போட்டு படம் எடுக்க தயாரிப்பாளர்கள் வரிசை கட்டி காத்துக் கொண்டிருக்கிறார்கள். கடைசியாக ரிலீசான பீஸ்ட் திரைப்படம் 150 கோடி பட்ஜெட்டில் தயாராகி 250 கோடி வரை வசூல் செய்தது.

பீஸ்ட் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய், தெலுங்கு பட இயக்குனர் வம்சியின் இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் ராஷ்மிகா, பிரகாஷ்ராஜ், சரத் குமார், பிரபு, குஷ்பு, யோகிபாபு, ஷ்யாம் ஆகியோர் நடித்திருக்கின்றனர். தில் ராஜு தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படம் பொங்கலன்று ரிலீசாகிறது.

வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து, விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 67’ படத்தில் இணையவிருக்கிறார். இந்த படம் கேங்ஸ்டர் கதையை மையமாக கொண்டது. விஜய்க்கு அடுத்தடுத்து கௌதம் மேனன், வெங்கட் பிரபு போன்ற இயக்குனர்கள் கதையை ரெடியாக வைத்திருக்கின்றனர். இப்போது இந்த லிஸ்டில் ஒரு இளம் இயக்குனர் சேர்ந்திருக்கிறார். ஜெயம் ரவி நடிப்பில் முழுக்க முழுக்க காமெடி கதாபாத்திரத்தில் வெளிவந்த படம் கோமாளி. இந்த படத்தை பார்த்து தளபதி விஜய் இயக்குனரை கூப்பிட்டு பாராட்டியுள்ளார்.

சமீபத்தில் ரிலீசாகி இளைஞர்களிடையே மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் லவ் டுடே. இன்றைய காதலுக்கு சமூக வலைத்தளங்கள் எவ்வளவு உதவியாக இருக்கிறதோ அதே அளவுக்கு அதில் தெரியாத ரகசியங்களும் ஆயிரம் இருப்பதை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த கதையை பிரதீப் ரங்கநாதன் இயக்கி ஹீரோவாகவும் நடித்திருக்கிறார்.

இப்போது சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரதீப் பத்திரிக்கியாளர்களிடம், தளபதி விஜய்க்கு கதை சொல்லி இருப்பதாகவும், விஜய் அந்த கதை தனக்கு பிடித்திருப்பதாக சொல்லியதாகவும் கூறியிருக்கிறார். மேலும் இதுபற்றி இப்போது பேசினால் நன்றாக இருக்காது எனவும், கூடிய விரைவில் சொல்லுவதாகவும் கூறியிருக்கிறார்.

தளபதி விஜய் போன்று டாப் ஸ்டார்கள் இப்போது இளம் இயக்குனர்களுடன் பணிபுரிந்து வருவது சினிமாவில் ஒரு ஆரோக்கியமான சூழலை உருவாக்கி இருக்கிறது. இப்போது பிரதீப் உடன் இவர் பணிபுரிந்தால் மீண்டும் பூவே உனக்காக, ஷாஜகான் பட விஜய்யை பார்க்க வாய்ப்பு இருக்கிறது. கூடிய விரைவில் இவர்களின் கூட்டணியில் புதிய பட அப்டேட்டை எதிர்பார்க்கலாம்.