பொன்னியின் செல்வன் 2 விற்கு பிறகு விக்ரம் தற்போது தங்கலான் பட ஷூட்டிங்கில் பிசியாக இருந்து வருகிறார். மேலும் அண்மையில் அவரின் பிறந்த நாள் அன்று வெளியான தங்கலான் பட மேக்கிங் வீடியோ பலரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தது.
அவ்வீடியோவை பார்க்கையில் இப்படத்திற்காக விக்ரம் தன் உடம்பினை ஃபிட் செய்ததும் மற்றும் அக்கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு அவருடைய ஹேர் ஸ்டைல் மற்றும் உடலை மாற்றி இருப்பது நன்றாக தெரிந்தது. இதனை வைத்து பார்க்கையில் இப்படத்திற்காக அவர் எந்த அளவுக்கு அர்ப்பணிப்புடன் இருந்தார் என்பதும் வியக்க வைக்கிறது.
இதுதான் இப்படத்தை வேற லெவலுக்கு எதிர்பார்க்க வைக்கிறது. மேலும் மாஸ்டர் பட ஹீரோயினான மாளவிகா மோகன் தான் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இவரும் தன் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக தன் உடலை ஃபிட் செய்து வருகிறார். அதிலும் இவர் ஜிம்மில் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
அதைப் பார்க்கும் போதே இவரின் பங்களிப்பும் பெரிதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அதில் அவர் சிக்ஸ் பேக் உடன் இருக்கிறார். மேலும் இப்படத்தில் இவரின் தோற்றம் வளர்ந்து வரும் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் இருக்கிறது.
இத்தகைய முயற்சியை போடும் இவரின் ரோல் இப்படத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் இவரின் சிக்ஸ் பேக் கெட்டப் விக்ரமுக்கே தண்ணி காட்டும் விதமாக அமைந்திருக்கிறது. இதன் மூலம் இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
