பராசக்தியில் நடிக்க சிவகார்த்திகேயன் போட்ட டீல்.. வெளிவந்த 70 கோடி ரகசியம்

Sivakarthikeyan: சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா ஆகியோர் நடிப்பில் பராசக்தி உருவாகி வருகிறது. டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் இப்படத்தை தயாரிக்கிறார்.

அடுத்த வருடம் பொங்கலுக்கு இப்படம் வெளியாகிறது. அதுவும் விஜய்யின் ஜனநாயகன் படத்தோடு மோதுகிறது. அதனாலேயே இந்த இரு படங்களும் இப்போது பெரும் கவனத்தைப் பெற்று வருகின்றனர்.

ஆனால் அமலாக்கத்துறை ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் ரெய்டு சென்ற நிலையில் பராசக்தி இப்போது சர்ச்சையாக மாறி இருக்கிறது. இந்த விவகாரத்தால் சிவகார்த்திகேயன் விசாரிக்கப்படலாம் என கூறுகின்றனர்.

வெளிவந்த 70 கோடி ரகசியம்

இதற்கு காரணமும் இருக்கிறது. அதாவது சூர்யா இப்படத்தில் இருந்து விலகிய பிறகு சிவகார்த்திகேயன் உள்ளே வந்தார். அப்போது ஆகாஷ் பாஸ்கரன் 70 கோடி சம்பளம் பேசி இருக்கிறார்.

அதுவும் பணமாக கொடுக்காமல் ஈசிஆரில் இருக்கும் சிவகார்த்திகேயன் வீட்டை இடித்து விட்டு புது வீடு கட்டி தருவது தான் டீல். ஆனால் அமலாக்கத்துறை ரெய்டு வந்ததால் இந்த விவகாரம் தற்போது வெளியில் தெரிய வந்துள்ளது.

மேலும் சிவகார்த்திகேயன் நிச்சயம் மாட்டுவார் என ஒரு பக்கம் செய்திகள் பரவிக் கொண்டிருக்கிறது. ஆனால் உச்ச நீதிமன்றம் அமலாக்க துறையின் ரெய்டுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

அதனால் பராசக்தி படத்திற்கு இனி எந்த பிரச்சனையும் இல்லை. அதே போல் சிவகார்த்திகேயன் நிச்சயம் விஜய்யோடு மோதுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.