ஊறுகாய் மாதிரி பயன்படுத்தப்பட்ட நடிகர்.. மாவீரன், ஜெயிலரில் காட்டாத காரத்தை காட்டிய வில்லன்

தற்போது வெளிவரும் படங்களில் கதை எந்த அளவுக்கு வித்தியாசமாக இருக்கிறதோ, அதற்கு இணையாக படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்களையும் வெவ்வேறு மொழியிலிருந்து எடுக்கப்பட்டு வருகிறார்கள். அது இப்பொழுது வழக்கமான ஒரு விஷயமாக மாறிவிட்டது. அப்படி இருந்தால் மட்டுமே அந்த படம் எல்லா இடங்களிலும் வெற்றி பெறுவதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும்.

இதற்கு காரணம் முதலில் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்தது லோகேஷ் கனகராஜ் தான். இவர் எடுக்கக்கூடிய படங்களில் மற்ற மொழி நடிகர்களை அழைத்தது. அத்துடன் அவர்களுக்கு முக்கிய கதாபாத்திரங்களை கொடுத்து மக்களிடமிருந்து மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்தி படத்திற்கும் அதிக வலுவை சேர்க்கும் படி அமைத்தது.

அந்த வகையில் அக்கட தேசத்திலிருந்து வந்து நடிக்கும் நடிகர்கள் அவர்களுக்கான கதாபாத்திரத்தை சரியாக புரிந்து கொண்டு தரமான நடிப்பை கொடுத்து விடுகிறார்கள். இதனால் எளிதாக தமிழ் ரசிகர்களின் மனதில் அவருக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடிகிறது. இப்படித்தான் அக்கட தேசத்து நடிகரான சுனில் என்பவர் தற்போது வெளிவரும் படங்கள் அனைத்திலும் கலக்கி கொண்டு வருகிறார்.

இவர் சமீபத்தில் நடித்த மாவீரன் படத்தில் புத்திசாலித்தனமான வில்லன் கதாபாத்திரத்தில் எதார்த்தமான நடிப்பை கொடுத்தார். அத்துடன் ஜெயிலர் படத்தில் காமெடி கலந்த ஜோக்கர் ஆகவும் இவருடைய தோற்றத்தை மாற்றி நகைச்சுவையாகவும் நடித்தார். அப்படிப்பட்ட இவரை தமிழ் சினிமா ஊறுகாய் மாதிரி பயன்படுத்தி வந்தார்கள்.

ஆனால் தற்போது முக்கிய வில்லனாக கலக்கி விட்டார் என்று ரசிகர்கள் சொல்லி கைதட்டளை கொடுத்து வருகிறார்கள். அதாவது விஷால் நடிப்பில் வெளிவந்த மார்க்க ஆண்டனி படத்தில் முக்கிய வில்லனாக சுனில் நடித்திருக்கிறார். இவருடைய நடிப்பை பார்ப்பதற்கு ரொம்பவே அழகாக இருக்கிறது.

அத்துடன் தரமான வில்லனுக்கு ஏற்ற எல்லா திறமையும் இருக்கிறது என்று இவரை புகழ்ந்து வருகிறார்கள். இப்படி தொடர்ந்து தமிழ் சினிமாவிலேயே ஐக்கியமாகிவிட்டார் என்று சொல்லும்படி அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இவரை தேடிக் கொண்டு போகிறது. அந்த வகையில் இனி பல படங்களில் இவருடைய நடிப்பை நாம் எதிர்பார்க்கலாம்.