ரஜினி, கமல் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் திரையுலகை பொருத்தவரை அவர்கள் போட்டி நடிகர்களாகவே பார்க்கப்பட்டு வருகின்றனர். அதன் காரணமாகவே அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் கூட மீடியாவில் பெரிய அளவில் பரப்பரப்பை ஏற்படுத்தி விடுகிறது.
அப்படித்தான் ரஜினியை புறக்கணித்துவிட்டு கமலிடம் ஒரு நடிகை தஞ்சமடைந்தது அந்த காலகட்டத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது ரஜினி, கமல் இருவருடனும் அதிக படங்களில் ஜோடி போட்டு நடித்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி. அதன் காரணமாகவே சூப்பர் ஸ்டார் அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு இருக்கிறார்.
தன் விருப்பத்தை அவர் ஸ்ரீதேவியிடம் தெரிவித்த போது அவர் அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். ஏனென்றால் அவருக்கு கமல் மீது அளவு கடந்த காதல் இருந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் தன் காதலை அம்மாவிடம் கூறிய ஸ்ரீதேவி இது குறித்து பேசுமாறு கேட்டிருக்கிறார். உடனே அவரும் தன் மகளை திருமணம் செய்து கொள்ளுமாறு கமலிடம் சிபாரிசுக்கு சென்று இருக்கிறார்.
ஆனால் கமலோ ஸ்ரீதேவி தனக்கு தங்கை மாதிரி என்றும் திரைப்படத்தில் தான் நாங்கள் நெருக்கமாக நடிக்கிறோம் மற்றபடி அவர் மேல் எனக்கு இப்படி ஒரு எண்ணம் வந்ததே கிடையாது என்று முடிவாக சொல்லி இருக்கிறார். இது ஸ்ரீதேவிக்கு அதிர்ச்சியை கொடுத்தது மட்டுமல்லாமல் பெரும் அவமானமாகவும் இருந்திருக்கிறது.
ஏனென்றால் ஸ்ரீதேவி எந்த அளவுக்கு அழகும், திறமையும் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். அதனாலேயே அவர் பல வருடங்கள் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார். மேலும் முன்னணியில் இருக்கும் ஹீரோக்கள் முதல் இயக்குனர்கள் வரை பலரும் இவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட கதைகளும் ஏராளம் உண்டு.
அப்படிப்பட்ட நடிகையை கமல் தங்கை என்று கூறி திருமணம் செய்ய மறுத்தது அப்போது பத்திரிகைகளில் பரபரப்பாக பேசப்பட்டது. தன் அம்மா சிபாரிசு செய்தும் ஆசை நிறைவேறாததால் ஸ்ரீதேவி சில காலம் கடும் அப்செட்டில் இருந்திருக்கிறார். அதன் பிறகு அவர் பாலிவுட் பக்கம் சென்று அங்கேயே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி இருக்கிறார்.