அடிமாட்டு விலைக்கு நடந்த வியாபாரம்.. ஆஸ்தான தயாரிப்பாளரை வைத்து காய் நகர்த்திய விஜய்

விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சரத்குமார், ராஷ்மிகா மந்தனா, குஷ்பூ உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

அது மட்டுமல்லாமல் இதுவரை இல்லாத அளவுக்கு வாரிசு திரைப்படத்தின் வியாபாரமும் உச்சத்தில் இருக்கிறது. அந்த வகையில் இப்படம் 400 கோடிக்கும் மேல் பிசினஸ் செய்யப்பட்டிருக்கிறது. அதில் தமிழ்நாடு உரிமையை தயாரிப்பாளர் லலித் குமார் பல கோடிகள் கொடுத்து கைப்பற்றி இருக்கிறார்.

இவர்தான் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தின் தமிழக உரிமையையும் வாங்கியிருந்தார். அது மட்டுமல்லாமல் விஜய்க்கு ரொம்பவும் நெருக்கமான மனிதரும் கூட. அதனால்தான் விஜய் இவரை வைத்தே வாரிசு திரைப்படத்தின் வெற்றிக்காக மறைமுகமாக காய் நகர்த்தி இருக்கிறார்.

எப்படி என்றால் கடைசியாக விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் கடும் விமர்சனங்களை சந்தித்தது. படத்தில் நிறைய இடங்களில் லாஜிக் மீறல்கள் இருந்ததும் படத்திற்கான பின்னடைவாக அமைந்தது. இதனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களிடம் ரீச் ஆகவில்லை. மேலும் படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் அப்படம் லாபம் என்று கூறினாலும் தியேட்டர் அதிபர்களுக்கு பெரிய அளவில் கலெக்சன் எதுவும் வரவில்லை.

அதை மனதில் வைத்து தான் தற்போது வாரிசு திரைப்படத்திற்கான வியாபாரமும் நடந்துள்ளது. அதாவது இந்த படத்தை அடிமாட்டு விலைக்கு தான் பலரும் கேட்டிருக்கிறார்கள். இதனால் அதிர்ந்து போன விஜய் முந்தைய படத்தின் நிலமை இப்போதும் வந்துவிட்டால் பலரின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாக வேண்டும் என்று சூப்பரான ஒரு பிளான் போட்டு இருக்கிறார். அதாவது தன்னுடைய ஆஸ்தான தயாரிப்பாளரான லலித்தை வைத்தே வாரிசு படத்தின் தமிழக உரிமையை வாங்கி இருக்கிறார்.

அதற்கான மொத்த பணத்தையும் விஜய் தான் கொடுத்திருக்கிறார். மேலும் சாட்டிலைட் மற்றும் ஓடிடி பிசினஸ் பின்னணியிலும் இப்படி ஒரு உள்குத்து இருந்திருக்கிறது. இப்படித்தான் வாரிசு திரைப்படத்தின் வியாபாரம் களை கட்டி இருக்கிறது. மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த இந்த விஷயம் தற்போது மெல்ல மெல்ல சோசியல் மீடியாவில் கசிந்து வருகிறது.