சரண்டராகி தஞ்சமடைந்த தயாரிப்பு நிறுவனம்.. உச்சாணி கொம்பிலிருந்து தனுஷ் போடும் டீல்

கடந்த சில தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த தனுசுக்கு தற்போது நல்ல நேரம் ஸ்டார்ட் ஆகிவிட்டது. அவரின் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் திருச்சிற்றம்பலம் படத்திற்கு ரசிகர்கள் அமோகமான ஆதரவை கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் தனுஷ் தற்போது வசூல் சக்கரவர்த்தியாக பாக்ஸ் ஆபிஸை கலக்கி கொண்டிருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இப்படம் சரிந்து கிடந்த அவருடைய மார்க்கெட்டை தூக்கி நிறுத்தி இருக்கிறது என்று தான் கூற வேண்டும். அந்த அளவுக்கு திருச்சிற்றம்பலம் படத்தை இளைஞர்கள் கொண்டாடி தீர்க்கின்றனர்.

இந்நிலையில் தனுஷின் அடுத்தடுத்த படங்களையும் தயாரிப்பதற்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறதாம். அந்த வகையில் தனுஷ் இப்போது நானே வருவேன், வாத்தி போன்ற திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்தப் படங்களை முடித்துவிட்டு அவர் மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைய திட்டமிட்டு இருக்கிறார். அதன் அடிப்படையில் சன் பிக்சர்ஸ் தனுஷை வைத்து இரண்டு படங்களை மெகா பட்ஜெட்டில் தயாரிக்க இருக்கிறது. அதில் ஒரு படத்தை இயக்குவதற்காக இயக்குனர் பாண்டிராஜிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம்.

மேலும் திருச்சிற்றம்பலம் பட டீமுக்கு அடுத்த படத்தை தொடங்குவதற்கான அட்வான்ஸ் கூட கொடுக்கப்பட்டு விட்டதாம். இதை வைத்து பார்க்கும் போது தனுஷ் தற்போது பிஸியான நடிகராக மாறி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் திருச்சிற்றம்பலம் பட வெற்றியால் அவர் தன்னுடைய சம்பளத்தை கூட உயர்த்தி இருக்கிறார்.

அவர் கேட்ட சம்பளத்தை கொடுப்பதற்கு தற்போது தயாரிப்பு நிறுவனங்களும் தயாராகவே இருக்கிறது. மேலும் இவருடைய திரைப்படத்தின் ஓடிடி உரிமையை வாங்குவதற்கும் பல நிறுவனங்கள் போட்டி போட்டு வருகிறதாம். அவர் நடிப்பில் அடுத்ததாக வர இருக்கும் படங்களும் நல்ல விலைக்கு பேசப்பட்டு இருப்பது கூடுதல் தகவல்.