Karthi : பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இப்போது எடுத்து வருகிறார். இதற்கான ஷூட்டிங் மைசூரில் நடைபெற்று வருகிறது.
இப்போது இறுதி கட்டப் பணியில் உள்ளது. இதைத்தொடர்ந்து லோகேஷ் மற்றும் கார்த்தி கூட்டணியில் கைதி 2 உருவாக இருந்தது. ஆனால் லோகேஷ் கூலி படத்திற்கு பிறகு அமேசான் நிறுவனத்திற்கு ஒரு ஷார்ட் பிலிம் செய்ய உள்ளார்.
ஆகையால் கார்த்தி அதற்குள் ஒரு ப்ராஜெக்ட் செய்ய உள்ளார். அதுவும் இதுவரை இல்லாத புதிய கூட்டணியில் இணை இருக்கிறார். அதாவது சுந்தர்சியுடன் தான் கார்த்தி கூட்டணி போட உள்ளார். இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கிறது.
கார்த்தியின் அடுத்த படம்
சுந்தர் சி இப்போது நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் 2 படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு கார்த்தியின் படத்தை சுந்தர் சி இயக்குவார் என்று கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
மேலும் கார்த்தி மற்றும் சுந்தர் சி இணையும் படம் காமெடி ஜானரில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் கார்த்தி சிறுத்தை போன்ற சில படங்களில் காமெடியில் பின்னி பெடல் எடுத்திருப்பார்.
அதேபோல் தான் சுந்தர் சியும் தனது நகைச்சுவையான கதை களத்தில் இந்த படத்தை எடுக்க முடிவு செய்திருக்கிறாராம். எதிர்பார்க்காத இந்த கூட்டணி ரசிகர்களுக்கு கண்டிப்பாக செம ட்ரீட் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.