Actress Nayanthara: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு தமிழ் சினிமாவில் இப்போது வாய்ப்புகள் குறைந்துவிட்டது. அவ்வப்போது ஒரு சில படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மேலும் பாலிவுட்டில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மட்டுமே பெரிதும் நம்பி இருக்கிறார்.
இந்நிலையில் நயன்தாரா தற்போது தமிழில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக இறைவன் படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே தனி ஒருவன் படத்தில் இவர்களது காம்பினேஷன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மீண்டும் இதே கூட்டணி இணைந்துள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வருகிறார்கள்.
இறைவன் படத்தை அகமது இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே தமிழில் வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன் போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். இந்த சூழலில் அகமது தனது படங்களில் கதாநாயகிக்கு ஒரே பெயரை வைத்து வருகிறார். அதன்படி என்றென்றும் புன்னகை படத்தில் திரிஷாவின் கதாபாத்திரம் பிரியா.
அதேபோல் உதயநிதி நடிப்பில் வெளியான மனிதன் படத்தில் ஹன்சிகாவின் கேரக்டர் பெயரும் பிரியா தான். அந்த வகையில் இப்போது நயன்தாராவுக்கும் இறைவன் படத்திலும் பிரியா என்ற கேரக்டர் தான் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். சுந்தர் சி இது போன்று தான் தனது படத்தின் கதாநாயகிகளுக்கு இந்து என்ற பெயர் வைப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.
இப்போது அகமதும் தனது படத்தின் கதாநாயகிகளுக்கு பிரியா என்ற தொடர்ந்து வைத்து வருகிறார். இதை பார்த்த ரசிகர்கள் இவரின் எக்ஸ் காதலியின் பெயர் பிரியாவாக இருக்குமோ என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். ஆனால் சென்டிமென்ட்டாக தொடர்ந்து இதே பெயரை தான் வைத்து வருவதால் ரசிகர்களுக்கு அலுப்பு தட்ட கூடும்.
மேலும் இறைவன் படத்தை முடித்த கையோடு ஜெயம் ரவியை வைத்து முன்பே ஆரம்பிக்கப்பட்ட ஜன கண மன படத்தை மீண்டும் இயக்குனர் கையில் எடுக்க உள்ளார். இந்தப் படத்தையும் ஒரே முழு வீச்சில் எடுத்து முடிக்க திட்டமிட்டு இருக்கிறார்களாம். ஆகையால் அகமது, ஜெயம் ரவி கூட்டணியில் அடுத்தடுத்து இரண்டு படங்களும் வெளியாக உள்ளது.