வருடம் முழுவதும் பிஸியாக இருக்கும் நடிகர் என்றால் அது விஜய் சேதுபதியாக மட்டும் தான் இருக்க முடியும். ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று இல்லாமல் குணச்சித்திரம், கெஸ்ட் ரோல், வில்லன் என ரவுண்டு கட்டி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் இவர் கையில் தற்போது ஏராளமான படங்கள் இருக்கிறது.
அதிலும் இப்போது பாலிவுட் பக்கம் அதிக கவனம் செலுத்தி வரும் இவர் ஜவான் உட்பட இன்னும் சில திரைப்படங்களையும் கைவசம் வைத்திருக்கிறார். அதன் படப்பிடிப்பில் பயங்கர ஆர்வத்தோடு பங்கேற்று வரும் இவர் நிற்க கூட நேரமில்லாத அளவுக்கு சென்னைக்கும், மும்பைக்கும் பறந்து கொண்டிருக்கிறாராம்.
அதனாலேயே தமிழ் இயக்குனர்களுக்கு இவரை சந்திப்பது பெரும் பாடாக மாறி இருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் மிஷ்கின் நினைத்ததை நடத்திக் காட்டி இருக்கிறார். அதாவது இவர் விஜய் சேதுபதியை வைத்து படம் எடுக்கப் போவதாக ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவர் பாலிவுட்டில் பிஸியாக இருக்கும் காரணத்தால் இது சாத்தியமாகுமா என்ற ஒரு கேள்வியும் எழுந்தது.
ஆனாலும் இந்த கூட்டணி தற்போது உறுதியாக இருக்கிறது. அந்த வகையில் விஜய் சேதுபதி, மிஷ்கின் இணையும் படத்தை தயாரிப்பாளர் தாணு பிரம்மாண்டமாக உருவாக்க இருக்கிறார். தற்போது இதன் பேச்சு வார்த்தை அனைத்தும் முடிந்த நிலையில் விரைவில் இதற்கான அறிவிப்பு வெளிவர இருக்கிறது.
பல வருடங்களாகவே பிசாசு 2 படத்தை எடுத்து வரும் மிஷ்கின் இப்போது அதன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். ஆண்ட்ரியாவின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்காக ரசிகர்கள் நீண்ட காலமாக காத்திருக்கின்றனர். அந்த வகையில் மிஷ்கின் இப்படத்தை விரைவாக முடித்துவிட்டு அவர் விஜய் சேதுபதி படத்தை ஆரம்பிக்க இருக்கிறாராம்.
மேலும் வழக்கமாக அவர் படத்தில் இருக்கும் சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் காட்சிகள் இந்த படத்திலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காகவே பார்த்து பார்த்து ஸ்கிரிப்ட் உருவாக்கி இருக்கும் இவர் விஜய் சேதுபதியை வேறு ஒரு கோணத்தில் காட்ட இருக்கிறாராம். அந்த வகையில் இந்த கூட்டணியின் மிரட்டல் அவதாரத்தை ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.