வளர்வதற்கு முன்னரே இவ்வளவு திமிரா.. சிவாங்கி நடந்து கொள்வதை பார்த்து கடும் எரிச்சலில் படக்குழு

விஜய் டிவி பிரபல நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலமானவர் சிவாங்கி. ஆனால் இவரை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இதில் கோமாளியாக இவர் பண்ணும் அலப்பறை ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.

சிவகார்த்திகேயனின் டான் படத்தின் மூலம் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் சிவாங்கி கால் பதித்தார். ஆனால் இவருக்கு நடிக்கவே தெரியவில்லை என்ற விமர்சனங்கள் தான் வந்தது. இந்நிலையில் வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் சிவாங்கி நடித்த வருகிறார்.

இப்படத்தில் இவர் நடித்த முக்காவாசி காட்சிகளை கட் செய்து விட்டார்களாம் படக்குழு. ஏனென்றால் இவருக்கு சுட்டு போட்டாலும் நடிப்பு வர மாட்டேங்குதுதாம். அதை கூட ஒரு வகையில் பொறுத்துக் கொண்டாலும் இவர் கொடுக்கும் அலப்பறை தாங்க முடியவில்லையாம்.

சிவாங்கி தனக்கான மேக்கப் மேனை அவரே கூட்டி வருகிறாராம். அதுவும் அவருக்கு சம்பளம் 14,000 ரூபாயாம். அதுமட்டுமின்றி தற்போது சிவாங்கி பல படங்களில் கமிட் ஆகியுள்ளார். அந்த படங்களில் காஸ்ட்யூம் சரியில்லை என நிறைய குறைகள் கூறி வருகிறாராம்.

ஒரு நாள் இந்த டிரஸ் பிடிக்கவில்லை என்று படப்பிடிப்பில் இருந்து சட்டு என்று கிளம்பி விட்டாராம். இதனால் அன்று நடக்க இருந்த படப்பிடிப்பு சிவாங்கியால் தடைபட்டதாம். இவ்வாறு நாளுக்கு நாள் ஒவ்வொரு ஏழரை கிளப்பி வருகிறார் சிவாங்கி. சமீபத்தில் கூட வெளிநாடு நிகழ்ச்சிக்காக செல்லும்போது தனது குடும்பத்திற்கும் டிக்கெட் போடும்படி தயாரிப்பாளர்களிடம் கூறியுள்ளார்.

இப்போது ஒரு சில படங்களில் காமெடி நடிகையாக வளர்ந்து கொண்டிருக்கும்போதே இப்படி பந்தா காட்டும் சிவாங்கி ஹீரோயின் ஆகிவிட்டால் அவ்வளவுதான் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதனால் இவரது பட வாய்ப்பு பறிபோகவும் அதிக வாய்ப்புள்ளது.