The film journey of MS Bhaskar, who has won more over time: எனக்கே முடி கொட்டிய பிறகு தான் வாய்ப்புகள் வந்தது. உலகத்தில் சாதனை செய்தவர்கள் பலர் உருவத்தில் குறைவாக இருந்தவர்களே என காமெடியாகவும் தன்னம்பிக்கையுடனும் பேசியவர் நடிகர் எம் எஸ் பாஸ்கர். தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக பிரபலமாகி பின் குண சித்திர நடிகராக மாறி ரசிகர்களை குமுறகுமுற அழ வைத்தவர் இந்த எம் எஸ் பாஸ்கர்.
நாடக கலைஞர் ஆன எம் எஸ் பாஸ்கர் தன் 22 வயதில்1987 ஆண்டு வெளிவந்த விசுவின் திருமதி ஒரு வெகுமதி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார். தொடர்ந்து சிறிய கதாபாத்திரங்களில் நடித்தாலும் பிரபலமாகாத எம்எஸ் பாஸ்கருக்கு சன் டிவி சீரியலில் ஒளிபரப்பான முன்னணி நடிகைகளின் சின்ன பாப்பா பெரிய பாப்பா தொடரில் இவர் நடித்த பட்டாபி கதாபாத்திரம் பட்டி தொட்டி எங்கும் இவரை பிரபலப்படுத்தியது.
இதன்பின் எம் எஸ் பாஸ்கர் 2001 ஆண்டு மாதவன்,ஜோதிகா நடித்த டும் டும் டும் படத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் பிரபலமானார். விஜயகாந்தின் எங்கள் அண்ணா திரைப்படத்திலும் குடிகாரன் வேடமேற்று நகைச்சுவையில் வயிறு வலிக்க செய்திருந்தார்.
ராதாமோகனின் மொழி திரைப்படம் இவருக்கு காமெடி நடிகரிலிருந்து குணச்சித்திர நடிகர்க்கான அந்தஸ்தை வழங்கியது. மகனை இழந்து காலத்தை நகர்த்த முடியாது தந்தையின் வேதனையை நம்முன் கொண்டு வந்து நம்மை அறியாமலே கண்ணீர் விட செய்தார் எம் எஸ் பாஸ்கர்.
எட்டு தோட்டாக்கள் படத்தில் இவர் வசனங்கள் பேசும் போதும் கண்ணீரில் கரையாதவரே இல்லை எனலாம். அதேபோல் ஜோதிகாவின் காற்றின் மொழி திரைப்படத்தில் மனைவியை இழந்த வேடத்தில் நதி எங்கே போகிறது கடலைத் தேடி என்ற பாடலை பாடி படம் முடிந்த பின்பும் அனைவரையும் முணுமுணுக்க செய்தார் எம் எஸ் பாஸ்கர்.
உலகநாயகன் கமல் நடிப்பில் ஈர்க்கப்பட்ட எம் எஸ் பாஸ்கர் அவருடன் இணைந்து தசாவதாரம், உத்தமவில்லன், பாபநாசம் போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார்.
எம்எஸ் பாஸ்கரின் சகோதரி ஹேமமாலினி அவர்கள் ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட் ஆவார் இவரும் அதேபோல் பல படங்களுக்கு பின்னணி குரல் கொடுத்து வருகிறார். எம் எஸ் பாஸ்கர் சிறந்த குணசத்திர நடிகருக்கான விருதை மொழி திரைப்படத்திற்காகவும் சிறந்த துணை நடிகருக்கான விருதை எட்டு தோட்டாக்கள் திரைப்படத்திற்காகவும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also read: சந்தானம் விட்டுக் கொடுக்காத அந்த 5 காமெடியன்கள்.. முரட்டு வில்லனையும் மொக்க பண்ணும் கெட்ட பைய காளி