ஒத்த தலைய காவு வாங்க பத்து தலையுடன் களத்தில் குதித்த சிம்பு.. வெற்றி இயக்குனருக்கு வைக்கும் செக்

சிம்பு பத்து தல படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு இப்போது மிஷ்கின் படத்திற்காக தயாராகி வருகிறார். மேலும் பத்து தல படத்தின் டப்பிங் வேலை மட்டும் மீதம் உள்ளது. மேலும் இப்போது ரிலீஸுக்கான வேலையில் படக்குழு மும்பரமாக உள்ளது. ஏனென்றால் மார்ச் மாதம் பத்து தல படம் வெளியாக உள்ளது.

ஆரம்பத்தில் இந்த படத்தில் கேமியோ தோற்றத்தில் நடிக்க தான் சிம்பு ஒப்பந்தமானார். ஆனால் தொடர் தோல்விகளை கொடுத்து வந்த சிம்புக்கு மாநாடு படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்த நிலையில் பத்து தல படத்தில் ஹீரோவாக மாறிவிட்டார். மேலும் ஹீரோவாக ஒப்பந்தமான கௌதம் கார்த்திக் செகண்ட் ஹீரோவாக மாறி உள்ளார்.

இந்நிலையில் பத்து தல படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சிம்புவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. கையில் கத்தி, துப்பாக்கி என ஆயுதங்களை வைத்து சிம்பு மிரட்டுகிறார். இந்தப் படத்திற்கு போட்டியாக பல வருடம் உருட்டி வந்த படமும் வெளியாக உள்ளது.

இயக்குனர் வெற்றிமாறன் காமெடி நடிகர் சூரியை கதாநாயகனாக விடுதலை படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகம் எடுத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல வருடங்களாக நடைபெற்று வந்தது. மேலும் விடுதலை படத்தில் உள்ள கெட்டப்பிற்காக சூரி வேறு படங்களிலும் ஒப்பந்தமாகாமல் இருந்தார்.

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் சிம்புவின் பத்து தல படத்திற்கு போட்டியாக விடுதலை முதல் பாகம் வெளியாக உள்ளதாம். இதனால் எந்த படம் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. சூரி கதாநாயகனாக முதலில் அறிமுகமாகியுள்ள படம் இதுதான்.

ஆனால் சிம்புக்கு போட்டியாக அவரது விடுதலை படம் வெளியாவதால் சூரிக்கு வெற்றி வாய்ப்பு குறைவு தான் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. வெற்றிமாறனின் ஒரு தலையைக் காவு வாங்க பத்து தலையுடன் சிம்பு களம் இறங்கி உள்ளார். மேலும் கடந்த இரண்டு வருடங்களில் மாநாடு, வெந்து தணிந்தது காடு என தொடர் வெற்றி கொடுத்தது சிம்புவின் மார்க்கெட் உச்சத்தில் உள்ளது. ஆகையால் பத்து தல வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.