Rajini In Jailer: கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரஜினி நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம் கலவையான விமர்சனத்தை கொடுத்தது. இதனை தொடர்ந்து ரஜினி படம் இனிமேல் அவ்வளவுதான் இந்த அளவுக்கு தான் இருக்கும் என்று பலரும் அவர்களுடைய கருத்துக்களை கொடுத்து வந்தார்கள்.
அதே போல் நெல்சன் இயக்கிய பீஸ்ட் படமும் சரியாக ஓடாமல் நெகட்டிவ் கருத்துக்களை இவர் மீது திணிக்கப்பட்டு வந்தனர். இப்படி இரண்டு பேரும் துவண்டு போய் இருந்த நேரத்தில், இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து கொடுத்த படம் தான் ஜெயிலர். அதாவது நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி திரையரங்குகளில் ஜெயிலர் படம் வெளியானது.
இப்படம் வெளியானதில் இருந்து இப்பொழுது வரை பல திரையரங்குகள் ஹவுஸ் ஃபுல்லாக வெற்றி நடை போட்டு வருகிறது. அத்துடன் வசூல் அளவிலும் கிட்டத்தட்ட 600 கோடியை பெற்றுவிட்டது. இதனால் நெல்சன் மற்றும் ரஜினி மிகுந்த சந்தோஷத்தில் இருந்ததோடு மட்டுமல்லாமல் தயாரிப்பாளருக்கும் லாபம் பண மழையாக கொட்டியது.
அத்துடன் இப்படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்ஃபிளிக்ஸ் வாங்கியுள்ளது. அந்த வகையில் இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7ம் தேதி ஓடிடி-யில் வெளிவரும் என்று ஆவலுடன் அனைவரும் எதிர்பார்த்து இருந்தார்கள். ஆனால் தற்போது வந்த தகவலின் படி ஓடிடி யில் வருவதற்கு முன் ஆன்லைனில் எச்டி மூலம் கசிந்து விட்டது.
இதனால் வசூல் அளவில் பெரிய அடி வாங்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இது என்னடா கலாநிதிக்கு வந்த சோதனை போல் இருக்கிறது. அத்துடன் ஓடிடி உரிமத்தைப் பெற்ற நெட்ஃபிளிக்ஸ்-க்கும் மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. மேலும் இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 20 நாட்கள் தாண்டிய நிலையிலும் திரையரங்குகளில் ஏகபோக வரவேற்புடன் மக்கள் பார்த்து வருகிறார்கள்.
அப்படி இருக்கும் பொழுது இந்த ஒரு விஷயம் அனைவருக்கும் பெரிய ஏமாற்றத்தை கொடுத்ததுடன், வசூல் அளவிலும் பின்னடைவு ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும் தற்போது வேறு எந்த புது படங்களும் வெளியாகாத சூழ்நிலையில் இப்படம் தனிக்காட்டு ராஜாவாக ஜெயித்துக் கொண்டிருந்த நிலையில் இதற்கு ஆப்பு வைக்கும் விதமாக ஜெயிலர் படம் ஆன்லைனில் வெளியாகிவிட்டது.