வாரிசு திரைப்படத்தில் நடித்திருக்கும் விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். தற்போது இப்படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் படம் குறித்து வெளிவரும் ஒவ்வொரு அப்டேட்டுகளும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் லேட்டஸ்ட் செய்தியாக இப்படத்தில் கமல் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இது பலருக்கும் ஆச்சரியம்தான். ஏனென்றால் ஏற்கனவே இந்த திரைப்படத்தை தயாரிப்பது குறித்து கமல் விஜய்யிடம் பேசி இருக்கிறார். ஆனால் விஜய் இதற்கான எந்த பதிலையும் தெளிவாக கூறவில்லை.
அப்படி இருக்கும் பட்சத்தில் கமல் இதில் கௌரவ தோற்றத்தில் நடிப்பதற்கு எப்படி சம்மதித்தார் என்பதுதான் பலரின் கேள்வியாக இருக்கிறது. ஆனால் அதில் தான் ஒரு முக்கிய ட்விஸ்ட் இருக்கிறது. லோகேஷுக்காக கமல் இப்படத்தில் நடிக்கிறார் என்றாலும் மற்றொரு காரணமும் இருக்கிறது.
அதாவது கமல் இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தால் அடுத்ததாக கமல் நடிக்கப் போகும் படத்தில் விஜய் ஒரு கௌரவ தோற்றத்தில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார். இப்படி ஒரு கண்டிஷன் போட்டு தான் கமல் தளபதி 67ல் நடிக்க இருக்கின்றார். இதன் மூலம் கமல் சிறு தூண்டிலை போட்டு பெரிய திமிங்கிலத்தை வளைத்து போட்டு இருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் விக்ரம் திரைப்படத்தின் தொடர்ச்சியான சில விஷயங்களும் இந்த திரைப்படத்தில் இடம்பெற இருக்கிறது. அதாவது கைதி மற்றும் விக்ரம் ஆகிய இரண்டு படங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருந்தது. அதே போன்று தான் தளபதி 67 திரைப்படத்தைதின் கதையும் அமைக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்து நடிகர் நரேன் சில நாட்களுக்கு முன்பு வெளிப்படையாக தெரிவித்து இருந்தார்.
அதாவது விக்ரம் திரைப்படத்தை பார்த்தால் மட்டுமே தளபதி 67 கதை புரியும் என்று கூறியிருந்தார். அதற்கு ஏற்ப தற்போது கமலும் ஒரு கேமியோ ரோலில் நடிக்க இருப்பது அந்த விஷயத்தை உறுதிப்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் லோகேஷின் இந்த வித்தியாசமான முயற்சி நிச்சயம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.