ஒரு படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டு கிடைத்தாலும் ஒரு சரியான அங்கீகாரம் என்பது விருது தான். அதிலும் ஆஸ்கர் விருது என்பது பலரது கனவாக இருந்து வருகிறது. இசைப்புயல் ஏஆர் ரகுமான் இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்று எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று கூறியது தமிழ் ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி இருந்தது.
இந்நிலையில் சமீபத்தில் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டுப்புற பாடலுக்காக ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. அந்த படத்தில் இசையமைத்த கீரவாணி அந்த விருதினை பெற்றுக் கொண்டார். இப்போது அடுத்த ஆஸ்கர் விருதுக்காக உலக நாயகன் கமல்ஹாசன் தயாராகி வருகிறார்.
அதாவது ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் படம் இந்தியன் 2. இந்த படத்தை லைக்கா மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இந்தியன் படத்தில் தாத்தாவாகிய சேனாதிபதி கதாபாத்திரம் பெரிய அளவில் வரவேற்கப்பட்டது. இந்தியன் 2 படம் சேனாதிபதியின் இளவயது கதை அம்சம் கொண்டதாம்.
ஆகையால் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தை கொண்டு வரவேண்டும் என பிரம்மாண்டமாக செட் தயார் செய்து இருக்கிறார்களாம். அந்த செட்டை பார்த்த எல்லோருமே பிரம்மித்து போய் உள்ளனராம். ஏனென்றால் அச்சு அசலாக அந்த காலத்திற்கு கொண்டு போய் விட்டதாம்.
அதுமட்டுமின்றி நாங்கள் வேறு உலகத்திற்கு சென்று விட்டோம் என பலரும் கூறியிருக்கின்றனர். இந்தியன் 2 படம் நிச்சயமாக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் என மொத்த படக்குழுவும் மார்பை தட்டிக் கொள்கிறார்களாம். இந்த அளவுக்கு படத்தில் ஒவ்வொரு விஷயங்களும் நுணுக்கமாக செய்து வருகிறார்கள்.
மேலும் கமலும் தன்னை வயதானவர் மற்றும் இளமையாக காட்ட பல மணி நேரம் மேக்கப் போட்டுக் கொள்கிறாராம். ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 3 மணி நேரம் மேக்கப்புக்கு செலவாகிறது என படக்குழு தரப்பிலிருந்து கூறப்படுகிறது. மேலும் சேனாதிபதியை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.