Director Nelson: சமீபத்தில் புதுப்புது இயக்குனர்கள் அவர்களுடைய வித்யாசமான பங்கை சினிமாவிற்கு அர்ப்பணித்துக் கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் அனைத்து பக்கங்களிலும் தலை தூக்கி கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் நெல்சன் இயக்கிய படங்களை மட்டும் கணிக்கவே முடியாத அளவிற்கு இருக்கிறது.
அதற்கு காரணம் நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் இந்த இரண்டு படங்களும் மக்களிடம் இருந்து பெரிய வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தளபதியை வைத்து எடுத்த பீஸ்ட் படம் இதே மாதிரி மிகப்பெரிய வரவேற்பு பெரும் என்று எதிர்பார்த்த நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்று மொக்கை படமாக முத்திரை குத்தப்பட்டது.
அடுத்ததாக இப்பொழுது சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்கிய ஜெயிலர் படம் தற்போது வரை மக்கள் ஆவலாக பார்க்கத் துடிக்கும் படமாக இருக்கிறது. இப்படத்தின் வெற்றியை வருகிற 10-ஆம் தேதி அன்று முழுமையாக தீர்மானிக்க முடியும். ஏனென்றால் இவர் எடுக்கக்கூடிய படங்கள் எந்த மாதிரியாக மக்களிடமிருந்து விமர்சனங்களை பெரும் என்று எதையுமே உறுதியாக இவரின் படத்தை பொருத்தவரை சொல்ல முடியாது.
ஒருவேளை நெல்சன் இயக்கியுள்ள ஜெயிலர் படம் நல்லபடியாக வெற்றி பெற்று மக்களுக்கு பிடித்த மாதிரி நல்ல விமர்சனத்தை பெற்றால் இவருடைய அடுத்த படத்தை துவங்க இருக்கிறார். அதாவது இவர் சினிமாவிற்கு நுழைந்த பொழுது எடுக்க நினைத்த ஒரு படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. 2010 ஆம் ஆண்டு நெல்சன் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் தான் வேட்டைய மன்னன்.
இப்படத்தை துவங்கிய நிலையில் சிலம்பரசன், ஜெய், ஹன்சிகா இவர்களை வைத்து பாதி வேலைகளை ஆரம்பித்து விட்டார். மேலும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதற்கு கமிட்டாகி இருந்தார். ஆனால் ஏதோ ஒரு காரணங்களால் படத்தின் தயாரிப்பு வேலைகள் பாதிலேயே நிறுத்தப்பட்டு கிடப்பில் போய்விட்டது.
இப்படத்தை மறுபடியும் எடுக்க நினைக்கிறார். ஆனால் இப்படத்தை எடுக்கவா, இல்ல அப்படியே விட்டு விடவா என்பதை எப்படி தீர்மானிக்கிறார் என்றால் ஜெயிலர் படத்தின் வெற்றியை வைத்துதான். ஜெயிலர் படம் வெற்றி அடைந்தால் வேட்டைய மன்னன் படப்பிடிப்பு துவங்கப்படும். இல்லையென்றால் இப்படத்தை அப்படியே க்ளோஸ் பண்ணிவிடலாம் என்று கணக்கு போட்டு வைத்திருக்கிறார். இவருடைய கணக்கு ஜெயிக்குமா இல்லையா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.