கிசுகிசுவில் சிக்காத ஒரே நடிகை.. கோடி ரூபாய் கொடுத்தாலும் கமலுடன் நடிக்க மாட்டேன்

Actor Kamal: சினிமாவில் நடிகைகளை பொருத்தவரையில் கிசுகிசுக்கள் என்பது சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது. ஒன்றுக்கு மேற்பட்ட படங்களில் நடிகர், நடிகைகள் ஜோடி போட்டால் அவர்களைப் பற்றி கிசுகிசுக்கள் வெளியாகிறது. இதில் சில நடிகைகள் நிஜமாகவே ஹீரோக்களுடன் தொடர்பு வைத்திருந்த செய்தியும் வெளியாகி இருக்கிறது.

இப்படி இருக்கும் சூழலில் தமிழ் சினிமாவில் தற்போது வரை ஒரு கிசுகிசுகளில் கூட சிக்காத நடிகை ஒருவர் இருக்கிறார். அதுவும் உச்ச நட்சத்திரமாக இருந்த ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், பிரபு போன்ற பல நடிகர்களுடன் இவர் ஜோடி போட்டு நடித்திருக்கிறார். இவர் கிசுகிசுவில் சிக்காததற்கு காரணம் இருக்கிறது.

அதாவது தனது படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர்களிடம் நெருக்கமான காட்சி, முத்தக் காட்சி, படுக்கையறை காட்சி ஆகியவற்றில் நடிக்க மாட்டேன் என்று முன்கூட்டியே சொல்லி விடுவாராம். அந்த நடிகை வேறு யாரும் இல்லை 80களில் கொடிகட்டி பறந்த நதியா தான். அழகு ததும்பும் இவர் அப்போது உள்ள இளம் பெண்களின் ஃபேவரட் நாயகியாக இருந்தார்.

அவர் அணியும் உபகரணங்கள் பெண்களுக்கு பிடித்தது போக எல்லாமே நதியா பிராண்டில் விற்கப்பட்டது. மேலும் அவரது ஹேர் ஸ்டைல், உடை என அனைத்தையுமே ரசிகர்கள் பின்பற்ற தொடங்கினார்கள். இந்நிலையில் உலக நாயகனின் படங்களில் அப்போது நிறைய நெருக்கமான காட்சிகள் இடம் பெறும்.

இதை கருத்தில் கொண்டு கோடி ரூபாய் கொடுத்தாலும் கமலின் படங்களில் நடிக்க மாட்டேன் என்பதில் நதியா உறுதியாக இருந்தார். அதுமட்டுமின்றி கமலுடன் வந்த வாய்ப்பையும் நதியா தவிர்த்து விட்டாராம். மேலும் திருமணமான பின்பு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். குழந்தைகள் வளர்ந்த பின்பு மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார்.

அதாவது ஜெயம் ரவி நடிப்பில் வெளியான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படம் தான் அவருக்கு கம்பேக் கொடுத்தது. அதன் பிறகு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ள நிலையில் தோனி தயாரிப்பில் உருவாகும் படம் ஒன்று இப்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் கிசுகிசுகளில் சிக்காத நடிகை நதியா தனது குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ இதுவும் ஒரு காரணம்.