பியு சின்னப்பா போல ரீமேக் படங்களிலேயே நடிக்காத தற்போதைய மாஸ் நடிகர்.. வியந்து பார்க்கும் கோலிவுட்!

திரையுலகில் வெற்றியடைந்த திரைப்படத்தினை மற்ற மொழிகளிலும் அவர்களின் கலாச்சாரத்திற்கு ஏற்ப அவர்களின் பாணியில் உருவாக்கி வெளியிடும் வழக்கம் கால காலமாகவே இருந்து கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட தமிழ் ரீமேக் திரைப்படங்கள் மூலமாகவே ஒரு சில ஹீரோக்கள் முன்னணி நாயகர்களாக வளர்ந்த கதையும் உண்டு.

இப்போது மட்டும் இல்லை அப்போதும் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் ஹீரோக்களும் நிறைய ரீமேக் படங்களில் நடித்துள்ளனர். ஆனால் இப்போது வரை ரீமேக் படங்களில் நடிக்காத இரண்டு ஹீரோக்களை பற்றி தற்போது சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் வைரலாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.

பி.யு. சின்னப்பா: 1960 ஆம் ஆண்டு எம் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த ‘சவுக்கடி சந்திரகாந்தா’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இவர், அதைத்தொடர்ந்து ஜகதலப்பிரதாபன் என்ற படத்தில் பிரதாபன் என்ற கதாபாத்திரத்தில் 5 இசைக்கருவிகளை வாசித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்.

இந்தப் படத்திற்குப் பிறகு மங்கையர்க்கரசி திரைப்படத்தில் மூன்று வேடங்களில் நடித்து கலக்கியவர். இப்படி நடிகராக மட்டுமல்லாமல் பாடல் பாடுவது, தயாரிப்பது என பன்முகத் திறமை கொண்ட பி.யு. சின்னப்பா, ஏகப்பட்ட படங்களை நடித்திருந்தாலும் கடைசிவரை ஒரு ரீமேக் படத்தில் கூட நடிக்காத பெருமைக்குரியவர்.

விஜய் சேதுபதி: சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதி, 2010 ஆம் ஆண்டு வெளியான தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார். இதைத்தொடர்ந்து எக்கச்சக்கமான படவாய்ப்புகளும் பெற்ற விஜய் சேதுபதி, கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என ஒரு சிலர் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க தயார் என வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

தற்சமயம் எங்கு பார்த்தாலும் விஜய்சேதுபதியின் முகம் தான் என ஒருசில கிண்டல் அடித்தாலும், தன்னுடைய வேகத்தை குறைக்காமல் தமிழ் சினிமா தவிர்க்க முடியாத கதாநாயகனாக மாறிவிட்டார், இவர் இன்றுவரை எந்த ஒரு ரீமேக் திரைப்படத்திலும் நடிக்காதது தான் ஆச்சரியம்.

அந்த காலம் எடுத்துக்கிட்டால் பி.யு. சின்னப்பா. இதுவரை எந்த ரீமேக் படங்களில் நடிப்பதில்லை. இந்த காலத்தில் விஜய் சேதுபதி எந்த ரீமேக் படங்களில் நடித்தது இல்லை என இவர்கள் இருவரையும் ஒப்பிட்டு கோலிவுட்டில் பெருமையாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.