கமல், விஜயகாந்த் சேர்ந்து நடித்த ஒரே படம்.. ஜாம்பவான்கள் சேர காரணமாக இருந்த நடிகை

80 காலகட்ட சினிமாவை கமல், ரஜினி இருவரும் தான் ஆட்சி செய்தார்கள். அவர்களுக்கு இணையாக இருந்த நடிகர் தான் விஜயகாந்த். சிறிது சிறிதாக முன்னேறி டாப் நடிகராக வந்த விஜயகாந்துக்கு இப்போதும் கூட ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இப்போது அவர் உடல் நல குறைவின் காரணமாக அரசியல், சினிமா என எதிலும் பங்கேற்காமல் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

ஆனால் கமல், ரஜினி ஆகியோர்கள் இன்னும் சினிமாவில் கதாநாயகனாக நடித்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் இவர்கள் இருவரும் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கமல், விஜயகாந்த் இருவரும் இணைந்து நடித்திருக்கிறார்களா என்பது பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் தான்.

ஆனால் இவர்கள் இருவரும் ஒரே ஒரு திரைப்படத்தில் மட்டும் இணைந்து நடித்திருக்கிறார்கள். இந்த இரண்டு ஜாம்பவான்களும் சேருவதற்கு ஒரு நடிகை தான் காரணமாக இருந்திருக்கிறார். அதாவது 80ஸ் ஹீரோயினாக புகழ்பெற்ற நடிகை ராதா தான் இந்த சரித்திர சம்பவத்திற்கு முக்கிய காரண கர்த்தாவாக இருக்கிறார்.

அந்த வகையில் மனக்கணக்கு என்ற திரைப்படத்தில் தான் இந்த அதிசயம் நிகழ்ந்திருக்கிறது. 1986 ஆம் ஆண்டு வெளிவந்த அந்த திரைப்படத்தில் விஜயகாந்த், ராதா, அம்பிகா, ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஆர் சி சக்தி இயக்கியிருந்த இந்த திரைப்படத்தை மனோகர் தயாரித்திருந்தார். அதில் இயக்குனர் சக்தி படம் இயக்குவதற்கு முன்பு ஒப்பனை கலைஞராக இருந்தவர்.

அந்த வகையில் இவர் ராதாவுக்கு மேக்கப் மேனாக இருந்திருக்கிறார். அந்த நட்பின் அடிப்படையிலேயே இவர் ராதா மூலம் தூதுவிட்டு இந்த கூட்டணியை அமைத்திருக்கிறார். அதனால் ராதா கேட்டதற்காக இந்த படத்தில் நடிப்பதற்கு விஜயகாந்த், கமல் இருவரும் சம்மதித்திருக்கின்றனர். ஆனால் கமல் இந்த படத்தில் கௌரவ தோற்றத்தில் தான் நடித்திருக்கிறார்.

இப்போதெல்லாம் டாப் ஹீரோக்களின் படங்களில் மற்றொரு பிரபல நடிகர் கௌரவ தோற்றத்தில் வருவது சாதாரண விஷயம் ஆகிவிட்டது. ஆனால் அந்த காலத்தில் முன்னணியில் இருக்கும் நடிகர்கள் மற்ற நடிகரின் திரைப்படங்களில் அவ்வளவு எளிதில் நடித்து விட மாட்டார்கள். அந்த வகையில் கமல், விஜயகாந்த் இருவரும் இந்த படத்தில் மட்டும் தான் இணைந்து நடித்திருக்கின்றனர். அதன்பிறகு இவர்களின் கூட்டணி எந்த படத்திலும் அமையவில்லை.