தளபதி-68 படத்தில் விஜய்க்கு இருக்கும் ஏகப்பட்ட பிளஸ்கள்.. எல்லாருமே அந்த ஒரு சீனுக்காக தான் வெயிட்டிங்

Thalapathy 68: நடிகர் விஜய் தன்னுடைய 68 ஆவது படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைந்திருக்கிறார். விஜய் இந்த படத்திற்கு பிறகு அரசியலுக்கு வர போகிறார், அதனால் இரண்டு வருடம் பிரேக் எடுக்கப் போகிறார் என்று செய்திகள் வெளியாகி கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் தளபதி 68 படத்தில் விஜய்க்கு ஏகப்பட்ட பாசிட்டிவ் விஷயங்கள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

விஜய்க்கு இருக்கும் ஏகப்பட்ட பிளஸ்கள்

தளபதி 68 படத்தின் மிகப்பெரிய பிளஸ் என்பது யுவன் சங்கர் ராஜா தான். கிட்டத்தட்ட 24 வருடத்திற்கு பிறகு விஜய் படத்திற்கு யுவன் இசை அமைக்கிறார். கடந்த சில வருடங்களாகவே அனிருத் இசையில் ஒரே மாதிரியான பாடல்கள் விஜய்க்கு போடப்பட்டது போல் சலிப்பு தட்டும் விதமாகத்தான் இருக்கிறது. மீண்டும் பல வருடங்கள் கழித்து விஜய் மற்றும் யுவன் சங்கர் ராஜா காம்போவில் பாடல்களை கேட்கலாம்.

நடிகர் விஜய் மாதிரி யாராலும் டான்ஸ் ஆட முடியாது என்பது நிதர்சனமான உண்மை. அவர் நடிகர் பிரபுதேவா உடன் இணைந்து இந்த படத்தில் நடிக்கிறார். கண்டிப்பாக இவர்கள் இருவரது கூட்டணியில் ஒரு டான்ஸ் காட்சி இருக்கும். மேலும் தமிழ் சினிமாவில் விஜய் அளவுக்கு ஆடக்கூடிய நடிகர் என்றால் பிரசாந்தை சொல்லலாம். அவரும் இந்த படத்தில் நடிப்பதால் இந்த மூன்று நடன புயல்களில் டான்ஸில் கண்டிப்பாக ஒரு காட்சி இருக்கும்.

அதேபோன்று இந்த தளபதி 68 படத்தில் விஜய் அப்பா மற்றும் மகன் கேரக்டரில் நடிக்கிறார். நீண்ட வருடங்கள் கழித்து விஜய் டூயல் ரோல் பண்ணுவது அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக அமையும். அதிலும் அப்பா கேரக்டருக்கு சினேகா ஜோடியாக நடிப்பது, மீண்டும் வசீகரா படத்தின் கெமிஸ்ட்ரியை பார்த்த திருப்தியை தரும். மகன் கேரக்டருக்கு மீனாட்சி சவுத்ரி என்னும் இளம் நடிகை நடிக்கிறார்.

தளபதி 68 படம் டைம் ட்ராவல் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. தமிழ் சினிமாவில் இது போன்ற கதைகளுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கும். நடிகர் விஜய் இதுவரைக்கும் இப்படிப்பட்ட ஒரு கதை அமைப்பில் நடித்தது கிடையாது. விஜய்க்கு இந்த கதை நன்றாக செட் ஆகும், படம் சூப்பர் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்க்கு தளபதி 68 படத்தில் சம்பளமும் ஒரு மிகப்பெரிய பாசிட்டிவான விஷயம் தான். விஜய் இந்த படத்திற்காக 200 கோடி சம்பளமாக வாங்கி இருக்கிறார். விஜய்யின் சமகாலத்து போட்டியாளர்களின் சம்பளங்களை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது, விஜய் தான் இப்போது இந்த விஷயத்தில் முதலிடத்தில் இருக்கிறார்.