பொன்னியின் செல்வன் வசூலில் கில்லி கொடுத்த தயாரிப்பாளர்.. பெரிய மனுஷன்னு நிரூபிச்சிட்டீங்க.!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் பார்ட்-1 திரைப்படம் இன்று வரை திரையரங்குகளில் ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் நாவலின் அடிப்படையிலேயே இத்திரைப்படம் உருவாக்கப்பட்டது.

எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 1950 காலகட்டத்திலிருந்து 1954ஆம் ஆண்டு காலகட்டம் வரை எழுதிய இந்நாவலில் சோழர்களின் வாழ்க்கை வரலாற்றையும், அவர்களது ஆட்சியைப் பற்றியும் விபரிக்கும் விதமாக பொன்னியின் செல்வன் என்ற நாவலை எழுதினார்.

இந்த நாவலை படித்த பலரும் திரைப்படமாக எடுக்க வேண்டும் என ஆசைப்பட்டு பல வருடங்களாக தோல்வியடைந்தனர். இதில் முக்கியமாக நடிகர் மற்றும் முன்னாள் மறைந்த முன்னாள்தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி உள்ளிட்ட பலரும் இடம்பெற்றுள்ளனர்.

இதனிடையே இயக்குனர் மணிரத்னம் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி பல பிரபலங்களை வைத்து பிரம்மாண்டமாக இப்படத்தை இயக்கி வெற்றியும் கொடுத்துள்ளார்.மேலும் இத்திரைப்படத்தின் பாகம்-2 அடுத்த வருடம் ரிலீசாகும் என படக்குழு அறிவித்துள்ளனர்.

இதனிடையே இத்திரைப்படத்தை தயாரித்த லைகா தயாரிப்பு நிறுவனம் கல்கி அவர்களின் அறக்கட்டளைக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளனர். கல்கி கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை சார்பாக ஏழை மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இதனிடையே லைகா நிறுவனம் ஒரு கோடி ரூபாய் அந்த அறக்கட்டளைக்கு உதவியாக வழங்கி உள்ளது. இப்படம் வெளியாவதற்கு முன்பாகவே பலரும் கல்கியின் அறக்கட்டளைக்கு உதவ வேண்டும் என வலியுறுத்தினர் அதனடிப்படையில் லைகா நிறுவனம் உதவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.