Santhanam: கீழ விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டல என்று ஒரு பழமொழி வெட்டி வீராப்புக்கு சொல்வது உண்டு. அப்படித்தான் சந்தானமும் இப்போது செய்து கொண்டிருக்கிறார்.
கவுண்டமணிக்கு பிறகு நகைச்சுவை உலகில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்தவர் சந்தானம். திடீரென வந்து ஹீரோ ஆசையால் உள்ளதும் போச்சு என்ற கதை ஆகிவிட்டது.
சந்தானத்துக்கு வந்த ஞானோதயம்
ஆரம்ப காலகட்டங்களில் இவர் ஹீரோவாக நடித்த ஒன்று, இரண்டு படங்கள் காமெடி சாயலில் இருந்ததால் ஹிட் அடித்தன.
அதை தொடர்ந்து சீரியஸ் ஹீரோ ஆன இவரை பார்த்து சிரிப்பு தான் வருகிறது என மக்கள் தட்டிக் கழிக்க ஆரம்பித்தார்கள்.
இருந்தாலும் ஓயாது எடுத்த சபதத்தை முடித்தே ஆக வேண்டும் என படங்களை தயாரித்து அவரே ஹீரோவாக நடித்தார்.
சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்ற கதையாக படம் மொத்தமும் தோல்வியடைந்தது. கஜானா காலியான நிலையில் சந்தானத்திற்கு ஞான உதயம் வந்திருக்கிறது.
மீண்டும் காமெடி ரூட்டை எடுத்திருக்கும் சந்தானம் சொல்லும் காரணம் நண்பர் என்பதால் தான் அந்த படத்தில் காமெடியனாக நடிக்கிறேன் என்பதுதான்.
பல வருடங்களுக்குப் பிறகு சிம்புவுக்காக ராஜ்குமார் இயக்கம் படத்தில் காமெடி கேரக்டரில் நடிக்கிறார்.
இதை தொடர்ந்து சந்தானம் கண்டிப்பாக ஆர்யாவுக்காக, கார்த்திக்காக என்று தொடர்ந்து காமெடியனாக ஒரு ரவுண்டு வருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.