உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வருவதற்கு முன்பே ஒரு ஹீரோவாக தன்னை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்திக்கொண்டார். அவருடைய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் தன்னை மக்களிடம் பிரபலமாக்கிக் கொண்ட அரசியலில் நுழைய வேண்டும் என்பதுதான் அவருடைய குறிக்கோள். அதை அவர் நிறைவேற்றிக் கொண்டார்.
இப்படி அவர் அரசியலில் அமைச்சராக சாதித்து விட்டாலும் அதைத் தாண்டி சினிமாவிலும் தனக்கான அடையாளத்தை உருவாக்கியுள்ளார். அதாவது உதயநிதி நடிகர் என்பதை காட்டிலும் ஒரு விநியோகஸ்தராக தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து வருகிறார். இந்த ஆண்டு அவருடைய ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
அதாவது இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான பெரும்பான்மையான படங்களை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தான் வெளியிட்டது. அதுமட்டுமின்றி இங்குள்ள பெரிய நடிகர்களின் படங்கள் எல்லாவற்றையுமே உதயநிதி தான் வெளியிட்டார். இவ்வாறு இந்த நிறுவனம் மிகப்பெரிய வளர்ச்சி அடைய பின்னால் காரணம் இருக்கிறது.
அதாவது தியேட்டர் உரிமையாளர்களிடம் உதயநிதி கணக்கு வழக்கை ஒழுங்காக வாங்கி கொள்கிறாராம். அதுமட்டுமின்றி விநியோகஸ்தர்களுக்கான பங்கினை முன்பு வாங்கியதை விட 20,30 சதவீதம் அதிகமாக வாங்கி கொடுத்து, விநியோகம் செய்வதற்கான கமிஷன் தொகையை குறைவாக பெற்றுக் கொள்கிறாராம்.
அதுமட்டுமின்றி லாபத்தை ஒரு வருடம் இரண்டு வருடம் என்று இழுத்து அடிக்காமல் உடனுக்குடனாக செட்டில் செய்து விடுகிறார்களாம். இந்த அணுகுமுறை தான் இந்த வருடம் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸை தயாரிப்பாளர்கள் அதிகம் விரும்ப காரணமாக அமைந்துள்ளது.
மேலும் அடுத்த ஆண்டும் உதயநிதி கைவசம் பெரிய படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கிறது. அஜித்தின் துணிவு, கமலின் இந்தியன் 2 மற்றும் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 ஆகிய படங்களை தமிழ்நாட்டில் உதயநிதி தான் வெளியிட இருக்கிறார்.