போதும்பா ரீல் அந்துபோச்சு!. சூர்யாவால் வெட்ட வெளிச்சமான டாப் ஹீரோக்களின் ஜகஜால தந்திரங்கள்

Suriya: கவுண்டமணி ஒரு காமெடியில் யப்பா சாமி, போதும் ரீல் அந்து போச்சு என்று சொல்லியிருப்பார். அப்படிதான் இப்போது தமிழ் சினிமா ஹீரோக்களின் முகமூடிகள் கிழிந்திருக்கிறது.

சூர்யா நடித்த ரெட்ரோ படத்துடன், சசிகுமார் நடிப்பில் கம்மி பட்ஜெட்டில் உருவான டூரிஸ்ட் பேமிலி படமும் ரிலீஸ் ஆனது. இதில் டூரிஸ்ட் பேமிலி ஆடியன்ஸ்களிடம் பெரிய அளவில் ரீச் ஆகி இருக்கிறது.

டாப் ஹீரோக்களின் ஜகஜால தந்திரங்கள்

இதற்கு காரணம் படத்தின் திரைக்கதை. இந்த படம் என்று இல்லை, சமீப காலமாக நல்ல கதை அம்சம் கொண்ட படங்களை மக்கள் விரும்பி பார்க்கிறார்கள்.

குட் நைட், குடும்பஸ்தன், லப்பர் பந்து போன்ற படங்கள் எல்லாம் இதற்கு சாட்சி. எங்க ஹீரோவை திரையில் பார்த்தால் மட்டும் போதும், எங்க தலைவர் வந்து கை அசைச்சா மட்டும் போதும் என்ற கதை எல்லாம் ஜனரஞ்சக ரசிகர்களிடம் இனி செல்லுபடி ஆகாது.

பஞ்ச் டயலாக், மாஸ் சீன் , கிளாமர் கதாநாயகி என டாப் ஹீரோக்கள் ரசிகர்களை நம்பி களம் இறங்குகிறார்கள்.

போதாத குறைக்கு அந்த ஹீரோக்கள் அடுத்த வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக தயாரிப்பாளர்கள் வசூலை அதிகம் ஏத்தி சொல்லி முட்டு கொடுப்பதாக இயக்குனர் ஒருவரே பகிரங்கமாக குற்றம் சாட்டியிருக்கிறார்.

மலையாள ஹீரோக்கள் தங்களுடைய மாஸ், கிளாஸ் எல்லாம் ஒதுக்கி விட்டு நடிப்பதால் தான் இன்றும் நிலைத்து இருக்கிறார்கள். நம் ஹீரோக்கள் இதை புரிந்து கொண்டு ஜனரஞ்சக ரசிகர்களை திருப்திப்படுத்தினால் தான் இனி தலை தப்பும்.