விரைவில் உருவாக உள்ள அரண்மனை 4.. பிரபல ஹீரோவை வளைத்து போட்ட சுந்தர் சி

சுந்தர் சி இயக்கத்தில் கடைசியாக வெளியான காபி வித் காதல் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் மீண்டும் தன்னுடைய ஹிட் படங்கள் ஆன அரண்மனையின் அடுத்த பாகத்தை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு அரண்மனை படத்தை சுந்தர் சி இயக்கிய இருந்தார்.

இந்த படத்தில் வினய், ஹன்சிகா, அண்ட்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இதைத்தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு திரிஷா, ஹன்சிகா ஆகியோரை வைத்த அரண்மனை 2 படத்தை சுந்தர் சி இயக்கி இருந்தார். இந்தப் படத்திற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க படத்தின் மூன்றாம் பாகத்தை கடந்த 2021ல் சுந்தர் சி இயக்கியிருந்தார்.

அந்தப் படத்தில் ஆர்யா, ஆண்ட்ரியா போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்திருந்தார்கள். இந்நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் கடைசியாக வெளியான கமர்சியல் படங்கள் தொடர் தோல்வியை தழுவி வருவதால் அரண்மனை 4 படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார். இந்தப் படத்திற்காக மாஸ் ஹீரோவை சுந்தர் சி தேர்வு செய்துள்ளார்.

அரண்மனை 4 படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார். பாலிவுட்டில் பல படங்களை கைவசம் வைத்துள்ள இவர் தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை படத்தின் நடித்துள்ளார். இந்நிலையில் சுந்தர்சியுடன் முதல் முறையாக அரண்மனை படத்தில் கூட்டணி போட இருக்கிறார்.

மேலும் இந்த படத்தில் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபகாலமாக சந்தானம் ஹீரோவாக நடித்த படங்கள் தோல்வி அடைந்து வரும் வேளையில் இப்போது மீண்டும் காமெடி கதாபாத்திரங்களில் நடிக்க முன்வந்துள்ளார்.

அஜித்தின் ஏகே 62 படத்தில் சந்தானம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இப்போது அரண்மனை 4 படத்திலும் சந்தானம் நடிக்க உள்ளார். மேலும் அரண்மனை படத்தை லைக்கா ப்ரொடக்ஷன் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது.