Actor Rajini: எப்படா பிரச்சனை ஏற்படும் என காத்துக் கொண்டிருக்கும் விஜய் ரசிகர்களுக்கு ஏதுவாய் ஜெயிலர் படத்தில் இடம் பெற்ற விஷயம் தற்பொழுது சூப்பர் ஸ்டாருக்கு வீண் வம்பாய் மாறி இருக்கிறது. மேலும் அவை வெறும் வாய்க்கு அவல் போட்ட விதமாய் மெல்ல பட்டு வருகிறது.
நெல்சன் இயக்கத்தில் பல எதிர்பார்ப்புகளை முன்வைத்து ரஜினி நடிப்பில் வெளிவந்த படம் தான் ஜெயிலர். மிகுந்த ஆர்வத்தோடு ரஜினி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இப்படம் தற்பொழுது பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.
படம் தொடங்குவதற்கு முன்பே ஆடியோ ரிலீஸ் இன் போது ஏற்பட்ட பிரச்சனை ஒரு பக்கம் அதுவே இன்னும் பூதாகரமாக பார்க்கப்படும் நிலையில், தற்போது புது பிரச்சனையாய் என வியக்கும் அளவிற்கு இருந்து வருகிறது. படம் வெளிவந்த 2 நாட்களே ஆகும் நிலையில் இப்படம் குறித்து ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள் இடையே ஒரு பக்கம் ஆஹா ஓஹோ என சொல்லப்பட்டாலும், அதற்கு எதிராய் விஜய் ரசிகர்கள் இப்படம் ஓடாது என திட்டவட்டமாக கூறி வருகின்றனர்.
ஏற்கனவே சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த பிரச்சனை இருந்து வரும் நிலையில் தற்போது ரிலீசான இப்படம் பீஸ்ட் படத்தை விட வசூலில் கம்மியாக தான் ஸ்கோர் செய்யும் எனவும் கூற தொடங்கி விட்டனர். ஜெயிலர் படத்திற்கு பீஸ்ட் படம் எவ்வளவோ பரவாயில்லை எனவும் பத்தவைத்து வருகின்றனர்.
இப்படி பிரச்சினை போய்க்கொண்டிருக்கும் நேரத்தில் ரஜினியே அவர்களுக்கு மெல்ல அரிசி கொடுத்தது போல சில தவறுகளை இப்படத்தில் செய்து உள்ளார். பாபா படத்திற்கு பிறகு புகை பிடிக்கும் காட்சிகளை அறவே ஒதுக்கி விட்டதாக கூறி வந்த ரஜினி. ஜெயிலர் படத்தில் சுருட்டு குடிப்பது போன்ற காட்சி இடம்பெற்று இருக்கிறது.
அவை குறித்து சமூக ஆர்வலர்கள் ரஜினிக்கு எதிராக போர் கொடியை பிடிக்க தொடங்கி விட்டனர். இது மட்டுமல்லாது வெளிநாடுகளில் ரிலீசான இப்படத்தில் ஓவர் வயலன்ஸ் இருப்பதாக கூறி பல தியேட்டர்களில் தடை செய்து வந்துள்ளனர். யுகே வில் படத்தின் பாதி வயலன்ஸ் காட்சிகளை நிராகரித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இது போன்ற டாக் தொடங்கியுள்ள நிலையில் இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் இருந்து வருகிறார் நெல்சன்.