டோக்கன் வாங்கி க்யூவில் உட்கார்ந்திருக்கும் அக்கட தேசத்து டாப் ஹீரோ.. உச்சகட்ட பரபரப்பில் லோகேஷ்

Director Lokesh Kanagaraj: விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில படங்களை மட்டுமே இயக்கினாலும் எடுக்கிற படங்களெல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து கொண்டு இருப்பவர்தான் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவருடைய படத்தில் தமிழில் மட்டுமல்ல பிற மொழி டாப் ஹீரோக்களும் நடிக்க ஆர்வம் காட்டிக்கொண்டிருக்கின்றனர்.

அதிலும் அக்கட தேசத்தை டாப் ஹீரோவான பிரபாஸ், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்க வேண்டும் என்று வெறித்தனமாக காத்திருக்கிறார். இதனால் தற்போது லோகேஷ் விஜய்யின் லியோ படத்தை முடித்துவிட்டு தன்னுடைய படத்தை தான் இயக்கப் போகிறார் என பிரபாஸ் ஆர்வத்துடன் காத்திருந்தார்.

ஆனால் இப்போது பிரபாஸின் நிலைமை டோக்கன் வாங்கி க்யூவில் உட்கார வேண்டியதாயிருக்கிறது. ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் கொடுத்த கமிட்மென்டால், கைதி 2 படத்தை எப்போது எடுப்பார் என்று பிரபல தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு காத்துக் கொண்டிருக்கிறார். இப்படி காத்துக் கொண்டிருந்தவருக்கு பிடி கொடுக்காமல் லோகேஷ் கனகராஜ் சுற்றித் திரிகிறார்.

ஏற்கனவே லோகேஷ் கனகராஜுக்கு சூப்பர் ஸ்டாரிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. இப்பொழுது தலைவர் 171 இருவரும் சேரவிருக்கின்றனர். தற்போது ஜெயிலர் படத்தை முடித்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் லோகேஷுக்கு அடுத்த பெரிய அழைப்பாக பிரபாஸ் படம் ஒன்று வந்தது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ், மாஸ்டர் படம் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும்போது லோகேஷ்க்கு ஒரு ஐந்து கோடி அட்வான்ஸ் கொடுத்து புக் செய்து வைத்துள்ளனர். இப்பொழுது கைதி 2 பண்ண எஸ் ஆர் பிரபு வேற காத்துக் கொண்டிருக்கிறார்.

ஏற்கனவே எஸ் ஆர் பிரபுவுக்கு கொடுத்த கமிட்மெண்டுக்காக பிரபாஸுக்குவில் உட்கார வைத்துவிட்டு, ரஜினிகாந்த் படத்திற்கு அப்புறம் கைதி 2 பண்ணுகிறார் லோகேஷ். இப்படி வரிசையாக பல முன்னணி பிரபலங்களின் படங்களை கையில் வைத்துக்கொண்டு லோகேஷ் திரை உலகை பெரும் பரபரப்பில் வைத்துள்ளார்.