இயக்குனர் கௌதம் மேனன் கடைசியாக சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்தை எடுத்திருந்தார். ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் வெந்து தணிந்தது காடு படமும் வெற்றி பெற்றது.
அதுமட்டுமின்றி கௌதம் மேனன் இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் முத்திரை பதித்துள்ளார். இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் விடுதலை படத்தில் கௌதம் மேனன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் கௌதம் மேனனை இளம் இயக்குனர் தன்னுடைய படத்தில் வச்சி செய்திருந்தார்.
அதாவது சமீபத்தில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் மாபெரும் வெற்றியடைந்த படம் லவ் டுடே. பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்த இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது மட்டுமின்றி வசூலையும் வாரி குவித்தது. இப்போது இந்த படம் ஹிந்தியிலும் உருவாக உள்ளது. லவ் டுடே படத்தில் கௌதம் மேனன் போல் இருக்கும் குரு பாயை வைத்து அவரை கலாய்த்து இருப்பார்கள்.
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக இருக்கும் கௌதம் மேனனை இளம் இயக்குனர் இவ்வாறு அசிங்கப்படுத்தி உள்ளதாக சிலர் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தனர். இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கௌதம் மேனன் பேசி உள்ளார். அதாவது பெரிய படங்களை காட்டிலும் அர்ச்சனா கல்பாத்தி இந்த படத்தை தயாரித்தது பாராட்டப்பட வேண்டிய விஷயம் என்று கூறினார்.
மேலும் அந்த படத்தில் என்னை ரொம்ப ஓட்டி இருப்பாங்க, லவ் டுடே படத்தில் நடிக்க கூப்பிட்டு இருந்தால் நானே வந்து அந்த கதாபாத்திரத்தில் நடித்துக் கொடுத்திருப்பேன் என கூறியுள்ளார். இவர் பேசியதற்கு அருகில் இருந்த அர்ச்சனா கல்பாத்தி மற்றும் பலரும் சிரித்தனர். கௌதமேனன் இதை சாதாரண விஷயமாக எடுத்துக் கொண்டது மிகப்பெரிய விஷயம்.
நானே நடித்திருப்பேன் என்று கூறி பெரிய மனுஷன் என்பதை நிரூபித்துள்ளார். கௌதம் மேனன் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 67 படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இதற்காக அவரது ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.