Vijay – Leo Movie: என்னதான் தளபதி விஜய் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் ஹீரோவாக இருந்தாலும் இவருக்கு ஒரு படம் ரிலீஸ் செய்வது என்பது எப்போதுமே போராட்டமான விஷயம் தான். மற்ற நடிகர்களை கம்பல் செய்து பார்க்கும் பொழுது விஜய் படம் என்றாலே பிரச்சனைக்கு பஞ்சம் இருக்காது என்பது போல் ஆகிவிட்டது. இந்த பிரச்சனையும் அவருடைய படங்கள் வெற்றி பெறுவதற்கு காரணமாகவும் நிறைய நேரம் மாறி இருக்கிறது.
நடிகர் விஜய் கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். தற்போது ஜெயிலர் படத்தின் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அந்த இடத்தை தட்டி தூக்கி இருக்கிறார். இது இப்படியே நிரந்தரமாகி விட வேண்டும் எனவும், விஜய் மீண்டும் அந்த இடத்திற்கு வந்து விடக்கூடாது எனவும் சதிகள் நடப்பதாக கடந்த சில தினங்களாகவே சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
ஜெயிலர் படத்தின் வசூலை, லியோ தாண்டி விடக் கூடாது என்பதால் அந்தப் படத்தின் கலெக்ஷனை குறைக்க பலரும் திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதற்கு பெரிய உறுதுணையாக இருப்பதே உதயநிதி ஸ்டாலின் தான் என்பது போலவும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதற்கு அரசியல் உள்நோக்கம் கூட காரணமாக இருக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.
இந்த நிலையில் எந்த ஹீரோக்களின் படங்களுக்கும் அதிகாலை காட்சிகள் கிடையாது என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதனால் தான் ரஜினியின் ஜெயிலர் படம் கூட காலை 8 மணிக்கு திரையிடப்பட்டது. தற்போது எல்லா திரையரங்குகளும் காலை 10 மணிக்கு மேல் தான் இயங்க வேண்டும் என தீர்க்கமான உத்தரவு பிறப்பித்து இருப்பதால் லியோ படத்திற்கு பெரிய சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவினால் லியோ படத்தின் ஒன்பது மணி காட்சியும் ரத்து செய்யப்படுகிறது. எப்போதுமே விஜய் படம் என்றால் அதிகாலை இரண்டு மணிக்கு கூட முதல் காட்சி திரையிடப்பட்டிருக்கிறது. இந்த அதிகாலை காட்சியில் தான் பெரும்பாலான படங்கள் வசூலையும் அள்ளிக் குவித்து இருக்கின்றன. அப்படி இருக்கும் பட்சத்தில் இப்போது ஒன்பது மணி காட்சிக்கு வழி இல்லாமல் போய்விட்டது.
ஏற்கனவே லியோ படத்திற்கு ஆரம்பத்திலிருந்து அதிகமாக நெருக்கடிகள் கொடுக்கப்பட்டு வருகிறது. தற்போது மொத்த வசூலுக்கு ஆப்பு வைக்கும் விதமாக அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டதோடு, 9 மணி காட்சியையும் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.