சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான பத்து தல படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தொடர் தோல்விகளை கொடுத்து வந்த சிம்புக்கு இப்படம் சற்று சறுக்களை ஏற்படுத்தி உள்ளது. அதைவிட இப்போது சிம்புவின் தலை உருளும் அளவுக்கு ஒரு பிரச்சனை போய்க்கொண்டிருக்கிறது.
இதற்கு காரணமும் சிம்பு தான். அதாவது நடுவில் தொடர் தோல்விகளை சிம்பு கொடுத்து வந்த நிலையில் மீண்டும் இவர் சினிமாவில் வளர முடியாது என சிம்பு காது படவே பலர் பேசி உள்ளனர். ஆனாலும் தனது ரசிகர்களுக்காக கடின உழைப்பு போட்டு மீண்டும் தனது இடத்தை பிடித்து விட்டார்.
மாநாடு ஆடியோ லான்ச்சில் கூட தனக்கு உறுதுணையாக இருந்தது ரசிகர்கள் மட்டும் தான் என்று கூறி கண்ணீர் மல்க பேசி இருந்தார். அதேபோல் பத்து தல விழாவிலும் என் ரசிகர்கள் இனி எதுவுமே எனக்காக செய்ய வேண்டாம், இனி நீங்கள் அவமானம் படும்படி நான் நடந்து கொள்ள மாட்டேன் என உறுதி அளித்திருந்தார்.
ஆனால் ஸ்டேஜில் மட்டும் தான் இவ்வளவு பில்டப், நிஜத்தில் மக்களையும், ரசிகர்களையும் சிம்பு மதிப்பதே இல்லை என ஒரு பேச்சு போய்க் கொண்டிருக்கிறது. அதாவது பத்து தல படத்தை பார்க்க வந்த ஒரு சமூகத்தினரை தியேட்டரில் அனுமதிக்காததால் பிரபல திரையரங்கு மீது ரசிகர்கள் கொந்தளித்து இருந்தனர்.
மேலும் சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் பிரபலங்கள் வரை இதற்கு கண்டனங்களும் தெரிவித்திருந்தனர். திரையரங்கு என்பது எல்லோருக்கும் பொதுவான ஒரு இடம், அங்கு இதுபோன்று நடந்தது மிகப்பெரிய பேசு பொருளாக மாறியது. இந்த சூழலில் பத்து தல படத்தின் போது இவ்வாறு நடந்த நிலையில் தற்போது வரை சிம்பு இது குறித்து எந்த ஒரு செய்தியும் கூறவில்லை.
அதுமட்டுமின்றி எல்லா விஷயத்திற்கும் பேட்டியளிக்கும் சிம்புவின் தந்தை டி ஆரும் இதற்கு மௌனம் சாதித்து வருவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. ரசிகர்களுக்காக எதையும் செய்வேன் என்று சொல்லும் சிம்பு தனது படத்தை பார்க்க வந்த ரசிகர்களுக்கு இவ்வாறு நடந்ததை பற்றி கண்டும் காணாமல் இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.