Biggboss 7: இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆண்டவர் பூமர் கேங்கை லெப்ட் அண்ட் ரைட் வாங்கினார். அதிலிருந்து ஒவ்வொருவரும் பேயறைந்தது போல் பிக்பாஸ் வீட்டுக்குள் சுற்றிக் கொண்டிருக்கின்றனர். அதில் இன்று ஓப்பன் நாமினேஷனும் நடந்திருக்கிறது.
அதில் வழக்கம் போல ஒவ்வொருவரும் தங்களுடைய எதிரியை நாமினேட் செய்தார்கள். இது வழக்கமாக நாம் எதிர்பார்ப்பது தான் அந்த வகையில் இந்த வாரம் 6 போட்டியாளர்கள் நாமினேஷனில் வசமாக சிக்கி இருக்கின்றனர். இதில் கமல் யாரை வீட்டை விட்டு துரத்த போகிறார் என்பதுதான் ட்விஸ்ட்.
அதன்படி விஷ்ணு, அர்ச்சனா, கூல் சுரேஷ், தினேஷ், அனன்யா, நிக்சன் ஆகியோர் இந்த லிஸ்டில் இடம்பெற்று இருக்கின்றனர். இதில் வழக்கம் போல தினேஷ், அர்ச்சனா இருவரும் காப்பாற்றப்பட்டு விடுவார்கள். அதே போன்று விஷ்ணுவுக்கும் ஆதரவு இருக்கத்தான் செய்கிறது.
அதனால் அவரும் தப்பித்து விடுவார். மீதம் இருக்கும் மூவரில் நிக்சன் வெளியேறுவதற்கு வாய்ப்பு கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. அந்த அளவுக்கு கடந்த வாரம் அவர் ரணகளமான ஒரு சம்பவத்தை செய்திருக்கிறார். கமல் அதற்கு சப்போட்டா வித்தாலும் மக்கள் கடுப்பில் தான் இருக்கின்றனர்.
அடுத்ததாக அனன்யா வெளியேறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. எலிமினேட் ஆகி வீட்டிற்குள் வந்தவர்களில் விஜய் வர்மா ஓரளவுக்கு தன்னுடைய பங்களிப்பை சிறப்பாக செய்து வருகிறார். அவரை ஒப்பிட்டு பார்க்கும்போது அனன்யா கொஞ்சம் கம்மி தான். அதேபோன்று கூல் சுரேஷ் வெளியேறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
ஏனென்றால் நாம் வெளியில் இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கிறோம். ஆனால் அவர் உள்ளே நேரடியாக பார்த்துக் கொண்டிருக்கிறார். அந்த அளவுக்கு தான் அவருடைய ஈடுபாடு இருக்கிறது. அதனால் இவர்கள் மூவரில் ஒருவர் வெளியேறும் வாய்ப்பு இருக்கிறது. போற போக்கை பார்த்தால் டைட்டில் வின்னர் சரவண விக்ரம் உண்மையாகவே டைட்டிலை அடித்தாலும் அடித்து விடுவார் போல.