உன் கூட அடுத்த படமா? தனுசுக்கு எந்த நடிகை மீது ஆசை, மேடையில் போட்டு உடைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்

தனுஷ் ஒரு மாஸ் நடிகராக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு பெற்று வருகிறது. தொடர் தோல்வியை கொடுத்து வந்த தனுசுக்கு இப்படம் ஆறுதலாக அமைந்துள்ளது.

இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இப்படத்தில் ஆண்ட்ரியா, அமீர், சமுத்திரகனி மற்றும் பலர் நடித்திருந்தனர். மேலும் தனுசுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார்.

இதில் வடசென்னை பாஷையில் படு லோக்கல் ஆக பேசி அனைவரையும் ஐஸ்வர்யா ராஜேஷ் மிரள வைத்திருந்தார். ஒரு விழாவில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், தனுஷ் அடுத்தடுத்த படங்களில் என்னுடன் நடிக்க மாட்டாராம். ஏனென்றால் தனுஷுக்கு இந்த நடிகையுடன் நடிக்க தான் பிடிக்கும் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

அதாவது தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா இடையே சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து உள்ளனர். இதற்குக் காரணம் தனுஷ் சில நடிகைகளுடன் நெருக்கமாக நடிப்பது தான் என கூறப்படுகிறது. ஐஸ்வர்யா எவ்வளவோ தடுத்தும் தனுஷ் அந்த நடிகையுடன் பழகி வருவதால் கோபமடைந்து மொத்தமாக தனுஷை விட்டு பிரிந்துவிட்டார் என்ற தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில், தனுஷுக்கு அமலாபாலுடன் நடிக்கத்தான் ஆசை என கூறியிருந்தார். மேலும் அடுத்ததாக நயன்தாராவுடன் நடிக்க வேண்டும் என தனுஷ் சொல்லியதாக ஐஸ்வர்யா ராஜேஷ் வெளிப்படையாக கூறியிருந்தார்.

ஏற்கனவே வேலையில்லா பட்டதாரி படத்தில் அமலாபாலுடன் தனுஷ் படு நெருக்கமாக நடித்திருந்ததால் தனது மனைவியை பிரிந்து விட்டார் என விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் இவ்வாறு பேசியிருப்பது இணையத்தில் சர்ச்சையாகியுள்ளது.