தளபதி 68 கூட்டணி உருவானது இப்படிதான்.. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே சீக்ரெட் ஆக லாக் செய்த ஏஜிஎஸ்

விஜய் தற்போது லோகேஷ் இயக்கத்தில் லியோ படத்தில் மும்மரமாக நடித்து வருகிறார். இதற்காக படப்பிடிப்பு காஷ்மீரில் ஆரம்பித்து முக்கால்வாசி சூட்டிங்கை முடித்த பிறகு மீதமுள்ள படப்பிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவதற்குள் இவருடைய அடுத்த படமான தளபதி 68வது படத்திற்கான பிள்ளையார் சுழி போட ஆரம்பித்து விட்டார். பொதுவாகவே முன்னணி நடிகர்களாக இருக்கும் அனைத்து ஹீரோக்களும் அவர்களுடைய அடுத்தடுத்த படத்தின் திட்டங்களை முன்னதாகவே யோசிப்பது வழக்கம் தான்.

அதே போல தான் விஜய்யும் லியோ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இவருடைய அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கிவிட்டார். அடுத்ததாக இவருடைய படங்கள் பொருத்தவரை பெரும்பாலும் பெரிய பட்ஜெட்டுகளில் தான் தயாராகும். அதனாலயே இவருடைய படத்தை எப்பொழுதும் கார்ப்பரேட் தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே கால் சீட்டை வாரி வழங்குவார்.

அதிலும் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த கத்தி- லைக்கா, பிகில்- ஏஜிஎஸ், சர்கார் மற்றும் பீஸ்ட்- சன் பிக்சர்ஸ் இது போன்ற பெரிய நிறுவனங்களுக்கு மாத்தி மாத்தி படங்களை கொடுத்து வந்தார். தற்போது திடீரென்று ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ், செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ இதெல்லாம் இவருடைய சாய்ஸாக வருகிறது. மேலும் இவருடைய 68வது படத்தை இயக்குவதற்காக இயக்குனர் அட்லீ, கார்த்திக் சுப்புராஜ், தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மலினேனி போன்ற பல இயக்குனர்கள் விஜய் இடம் கதை சொல்லி இருக்கிறார்கள்.

இதனால் விஜய் அவருடைய அடுத்த படத்தை எந்த இயக்குனரிடம் கொடுப்பார் என்று எதிர்பார்த்து நிலையில் யாரும் எதிர்பார்க்காத விதமாக வெங்கட் பிரபு என்டரி கொடுத்து வாய்ப்பை ஈஸியாக தட்டி தூக்கி விட்டார். அதேபோல பிகில் படத்திற்கு பின் மறுபடியும் விஜய்யை வைத்து தயாரிக்க வேண்டும் என்று பெரிய ஆசையில் இருந்தது ஏஜிஎஸ் நிறுவனம். இது பற்றிய முன்னாடியே விஜய் இடம் சொல்லி ரெண்டு வருஷமாக யாருக்கும் தெரியாமல் சீக்ரட்டாக விஜய்யின் கால் சீட்டை லாக் செய்து விட்டார்.

அதற்கு ஏற்ற மாதிரி வெங்கட் பிரபு, தளபதி 68 படத்தை இயக்குவது முடிவான நிலையில் இவர்கள் கூட்டணியில் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தான் தயாரிக்க போவதாக உறுதியாகிவிட்டது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ல் வெளியிடுவதற்கு எல்லா வேலைகளையும் பார்த்து வருகிறார்கள். கண்டிப்பாக விஜய்யின் ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய ட்ரீட்டாக இருக்கப் போகிறது.

மேலும் வெங்கட் பிரபு எப்படி அஜித்துக்கு மங்காத்தா, சிம்புக்கு மாநாடு படத்தை கொடுத்து மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினார். அதே மாதிரி விஜய்க்கும் யாரும் எதிர்பார்க்காத விதமாக செம பிரம்மாண்டமான படத்தை கொடுத்து ரசிகர்களை திருப்திப்படுத்துவார் என்ற பெரிய எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது.