மீண்டும் இணைந்த வல்லவன் கூட்டணி.. சிம்பு கேரக்டர் இதுதான்.?

Simbu : பல வருடங்களுக்குப் பிறகு சிம்பு மற்றும் சந்தானம் இணைந்து நடிக்கிறார்கள். சமீபகாலமாக சந்தானம் கதாநாயகனாக மட்டுமே நடித்து வந்தார். ஆனால் சிம்பு கேட்டுக்கொண்டதற்கு இணங்க 13 வருடம் கழித்து மீண்டும் காமெடியில் இறங்குகிறார் சந்தானம்.

சமீபத்தில் இந்த படத்தின் பூஜை போடப்பட்டிருந்தது. ராம்குமார் இயக்கும் இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கயாடு லோகர் நடித்திருக்கிறார். இவர் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக டிராகன் படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தின் மூலம் ஒரே நைட்டில் ஃபேமஸானார். அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பு கிடைத்து வருகிறது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க கமிட்டாகி உள்ளார்.

சிம்புவின் 49ஆவது படத்தில் அவரது கெட்டப் இதுதான்

மேலும் மன்மதன், வல்லவன் படங்களைப் போல சிம்பு, சந்தானம் கூட்டணியில் உருவாகும் இந்த படமும் காலேஜ் சப்ஜெக்ட்டாக உள்ளது. இதற்காக சென்னையில் பிரம்மாண்டமாக காலேஜ் செட் அமைக்கும் வேலை நடந்து வருகிறது.

ஆகையால் சிம்புவை மீண்டும் காலேஜ் பையன் போல் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். வல்லவன் படத்தைப் போல இந்த படமும் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது சிம்பு கமலுடன் இணைந்து தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த கையோடு ராம்குமார் படத்தில் இணைய இருக்கிறார். இவ்வாறு அடுத்தடுத்து சிம்பு கெத்து காட்டி வருகிறார்.