ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், பிரபு போன்ற நடிகர்களுடன் ஜோடி போட்ட நதியா கமல்ஹாசனின் ஒரு படத்தில் கூட இவர் நடித்ததில்லை. இதற்கான காரணத்தைப் பற்றி அண்மையில் நதியா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதாவது நதியா வந்த புதிதில் ஆண்களை மட்டுமல்லாமல் பெண் ரசிகர்களையும் அதிகமாக கவர்ந்தார்.
அதுமட்டுமின்றி பெண்கள் உபயோகிக்கும் பொருட்களுக்கு நதியா பெயரை வைத்து தான் வியாபாரம் செய்தனர். மேலும் திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்காமல் இருந்தார். அதன் பின்பு எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்து தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்தார்.
தற்போது தொடர்ந்து முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்த நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நதியா, கமலஹாசன் உடன் நடிக்கும் வாய்ப்பு எனக்கு பலமுறை வந்துள்ளது. அந்தச் சமயத்தில் நான் வேறு ஏதாவது படங்களில் பிசியாக இருந்தேன்.
எவ்வளவோ அந்த படத்தில் இருந்து வெளிவர நான் முயற்சித்தோம் முடியவில்லை. மேலும் சினிமா மீது அவ்வளவு ஈடுபாடு உடையவர் கமலஹாசன். அவருடன் நடிக்க எல்லா நடிகைகளும் போட்டி போடுவார்கள். ஆனால் கமலுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் என்னால் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
கமலஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் படத்தில் முதலில் நதியா தான் தேர்வாகியுள்ளார் என கூறப்பட்டது. அதன் பின்பு அவர் மறுத்ததால் தான் கௌதமி அந்தப் படத்தில் நடித்தார் என்ற தகவல் வெளியானது. இதைப் பற்றி நதியாவிடம் கேட்ட போது இது முற்றிலும் தவறான செய்தி என்று கூறியிருந்தார்.
அதாவது பாபநாசம் படத்தின் வாய்ப்பு எனக்கு வரவே இல்லை என நதியா மறுத்தார். மேலும் கமல் தற்போது மீண்டும் பழையபடி அடுத்தடுத்த படங்களில் பிஸியாக உள்ளார். இனி வரும் காலங்களிலாவது கமலுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறதா என்பதை பார்ப்போம் என்று நதியா கூறியுள்ளார்.