இந்தியன் 2 கதை இதுதான்.. கமலை வாட்டி வதைக்கும் ஷங்கர், சேனாதிபதிக்கு கொடுக்கும் நெருக்கடி

ஷங்கர் இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் கமல் நடிப்பில் உருவாகி வரும் படம் இந்தியன் 2. சில காரணங்களால் படப்பிடிப்பு தடைபட்ட நிலையில் இப்போது படுஜோராக வேலைகள் நடந்து வருகிறது. இந்த படத்தின் தமிழ்நாட்டு உரிமையை உதயநிதி கைப்பற்றியுள்ளார்.

இந்தப் படத்தில் காஜல் அகர்வால், யுவராஜ் சிங் என் தந்தை யோக்ராஜ் போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். இந்தியன் 2 படத்தில் கமலுக்கான பல காட்சிகள் டூப் போட்டு எடுக்கப்பட்டு வருகிறதாம். தற்போது இந்த படத்தை பற்றி சில தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதாவது இந்தியன் 2 படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னையில் உள்ள பிரசாந்த் ஸ்டூடியோவில் பிரம்மாண்டமாக செட் போட்டு எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியன் 2 படத்திற்காக கமல் ரொம்ப மெனக்கெட்டு வருகிறாராம். அதாவது அவரது மேக்கப் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம்தான் தாங்குகிறதாம்.

ஆகையால் ஒரு நாளைக்கு பலமுறை மேக்கப் போட வேண்டி இருக்கிறதாம். இப்போது இந்தியன் 2 படத்திற்கான கதை ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அதாவது இந்த படத்தின் ஆரம்பத்திலேயே கமல் வெளிநாட்டிற்கு தப்பித்தது போல் காண்பிக்கப்படுகிறது.

அங்கு அவருக்கு மீண்டும் அரசியல் நெருக்கடி வருகிறது. அதாவது போராட்ட உணர்வும் நேர்மையான குணமும் கொண்ட  ஒருவருக்கு ஆபத்து வருகிறது. ஆனால் அப்போதும் தனது நேர்மையை விட்டுக் கொடுக்காமல் போராடுகிறார்.

இந்த குணம் அவருக்கு எப்படி வந்தது என்பதுதான் பிளாஷ்பேக். மீண்டும் இப்போது வந்த ஆபத்திலிருந்து சேனாதிபதி சமாளித்து எப்படி வெற்றி பெறுகிறார் என்பது இந்தியன் 2 படத்தின் கதையாம். ஒவ்வொரு காட்சியும் தத்ரூபமாக எடுக்க கமலை வாட்டி வதைத்து வருகிறாராம் ஷங்கர்.