விஜய் சேதுபதி தற்போது மாஸ் ஹீரோவாக இருந்தாலும் மிக எளிதில் இந்த உயரத்தை அவர் அடையவில்லை. பொதுவாக ஹீரோ அந்தஸ்தில் உள்ளவர்கள் மற்ற கதாபாத்திரத்தில் நடிக்க தயக்கம் காட்டுவார்கள். ஆனால் விஜய் சேதுபதியை பொருத்தவரையில் வில்லன், குணச்சித்திரம், ஹீரோ என அனைத்து கதாபாத்திரம் கொடுத்தாலும் அருமையாக நடிக்க கூடியவர்.
தமிழ் சினிமாவில் ஒரு சகலகலா வல்லவனாக விஜய் சேதுபதி வலம் வருகிறார். சினிமாவுக்கு வருவதற்கு முன் விஜய் சேதுபதி வெளிநாட்டில் வேலை பார்த்துள்ளார். அதன் பின்பு சினிமாவுக்கு வாய்ப்பு தேடி பல வருடங்கள் போராடி உள்ளார். முதலில் குரூப் ஆர்டிஸ்ட், அடிதடி ரவுடி, ஹீரோவின் நண்பர் போன்று குரூப்பில் ஒருவராக இருந்துள்ளார்.
அப்படி படிப்படியாக வளர்ந்து தான் இப்போது பாலிவுட் வரை விஜய் சேதுபதி சென்றுள்ளார். அங்கு 4,5 படங்களை கைவசம் வைத்துள்ளார். இப்படி முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்பதை நிரூபித்துக் காட்டிய விஜய் சேதுபதி போல் தெலுங்கில் ஒரு ஹீரோ உள்ளார்.
அதாவது சினிமாவில் பல அடிகள் வாங்கி அதன் பின்பு முன்னேறியவர் நானி. இவரது நடிப்பில் தமிழில் வெளியான நானி ஈ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களையும் நானி கவர்ந்தார். இவரும் விஜய் சேதுபதி போல் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் பின்னி பெடல் எடுப்பார்.
மேலும் எவ்வளவு பெரிய இடத்தை அடைந்தாலும் தலைகனம் இல்லாமல் நானி உள்ளார். இவர் நடிப்பில் வெளியான ஷாம் சிங்கா ராய் படம் வசூல் ரீதியாக நல்ல லாபத்தை பெற்று தந்தது. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு பல பிரபலங்களும் நானிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அந்த வகையில் உலக நாயகன் கமலே நானியை கூப்பிட்ட இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் நன்றாக இருந்தது என பாராட்டி உள்ளாராம். இப்போது கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து தசரா என்ற படத்தில் நானி நடித்து உள்ளார்.
கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சூர்யா போன்ற நடிகர்கள் போல நானியும் பல தரப்பட்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவருடைய கடின உழைப்புக்கு இன்னும் பல வெற்றிகள் அடைந்து உயரத்திற்கு செல்வார் என பலரும் கூறிவருகிறார்கள்.