நடிகர் பிரசாந்தின் திருமண வாழ்க்கை குறுகிய நாட்களிலேயே முடிந்து விட்டது என்றாலும், உண்மையாகவே அவருடைய திருமண உறவில் என்ன தான் நடந்தது என்பது யாருக்கும் தெரியாது. திருமணமான ஆறு மாதங்களுக்குள் பிரசாந்தின் திருமண உறவு முறிந்தது.
ரஜினி, கமலுக்கு பிறகு அடுத்த இடத்தில் இருந்தது பிரசாந்த் என்றே சொல்லலாம். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் அவருடைய வெற்றி தடைபட்டு விட்டது. இதற்கு பிரசாந்தின் தனிப்பட்ட வாழ்க்கையும் ஒரு காரணம் என கூறலாம்.
இது பற்றி அவருடைய தந்தை, இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் தியாகராஜனிடம் கேட்ட போது அவரும் , அவருடைய குடும்பமும் ஏமாற்றப்பட்டு விட்டதாகவும், சரியாக விசாரிக்காமல் பிராசிந்திற்கு திருமணம் செய்து வைத்தது தான் தன்னுடைய தவறு என்றும் கூறியுள்ளார்,
பிரசாந்த்திற்கு அன்றைய நாட்களில் அதிக ரசிகைகள் உண்டு, ஏன் நடிகைகளும் கூட அவர் மீது ஆசைப்பட்டது உண்டு. ஆனால் பிரசாந்த் வீட்டில் பார்த்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டார்.
பிரசாந்த்திற்கு மருத்துவம் பார்த்த டாக்டர் ஒருவரின் உறவுக்கார பெண்ணான கிரகலட்சுமி என்பவரை 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமான ஒன்றரை மாதங்களில் கிரகலட்சுமி பிரசாந்தின் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அதன் பின்னர் தான் கிரகலட்சுமி ஏற்கனவே திருமணமானவர் என்பது தெரிய வந்து இருக்கிறது. அதன் பின்பு இருவரும் விவாகரத்து பெற்றனர்.
பிரசாந்திற்கு அந்த பெண்ணை திருமணம் செய்து வைத்ததை தவிர, தான் எந்த தவறும் செய்யவில்லை எனவும் மற்றபடி தன் வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை பிரசாந்த் தான் எடுத்து இருக்கிறார் எனவும் தியாகராஜன் கூறினார். பிரசாந்த் தற்போது அந்தகன் என்னும் திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். மேலும் அவர் இரண்டாம் திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.