Thug Life: மணிரத்னம், கமல் கூட்டணி பல வருடங்களுக்குப் பிறகு தக் லைஃப் படத்தின் மூலம் இணைத்துள்ளனர். சிம்பு, த்ரிஷா, அபிராமி என பல பிரபலங்கள் இதில் நடித்துள்ளனர்.
ஜூன் 5-ம் தேதி இப்படம் உலக அளவில் வெளியாகிறது. இந்நிலையில் ப்ரமோஷன் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு உட்பட எல்லா மாநிலங்களிலும் நடைபெற்று வருகிறது.
அதேபோல் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்தவும் திட்டமிட்டிருந்தனர். ஆனால் இந்தியா பாகிஸ்தான் போர் நடைபெற்ற நிலையில் அதை தயாரிப்பு தரப்பு தள்ளி வைத்தது.
ரிலீசுக்கு முன்பே கெத்து காட்டும் தக் லைஃப்
தற்போது போர் முடிவு பெற்று இருந்தாலும் தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் தக் லைஃப் படத்தின் சாட்டிலைட் உரிமம் பற்றிய தகவல் கசிந்துள்ளது.
ஏற்கனவே இதன் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் 150 கோடிகள் கொடுத்து வாங்கி இருந்தது. அதை அடுத்து விஜய் டிவி சாட்டிலைட் உரிமையை 60 கோடிகள் கொடுத்து கைப்பற்றி இருக்கிறது.
இப்படியாக தக் லைஃப் ரிலீசுக்கு முன்பே வியாபாரத்தில் கெத்து காட்டியுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படம் என்பதால் நிச்சயம் வசூலில் விக்ரம் படத்தை முந்திவிடும் என்கிறது கருத்துக்கணிப்பு.